நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்க, உணவு மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். ஏனெனில், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் சிறிய கவனக்குறைவு கூட சர்க்கரையின் அளவை எகிற வைக்கும். நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள 7 விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். இந்த விஷயங்களை கடைபிடித்து வந்தால், சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.
உணவில் கவனம்
சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க, உங்கள் உணவில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம், இதற்காக உங்கள் உணவில் நிறைய காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்ளவும். இனிப்பு உணவுகள் மற்றும் பானங்களை தவிர்க்கவும் அல்லது குறைக்கவும். நார் சத்து நிறைந்த உணவை சாப்பிடுங்கள்.நீங்கள் அதிக எடையுடன் இருந்தால், உடல் பருமனை குறைக்க முயற்சி செய்யவும்.
சுறுசுறுப்பாக இருத்தல்
நீரிழிவு நோயாளிகள் வாரத்தில் 5 நாட்கள் உடற்பயிற்சி செய்வதும், தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வதும் முக்கியம். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நடத்தல், எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம். இதன் மூலம் நீங்கள் நிச்சயம் பலன் அடைவீர்கள்.
சர்க்கரை அளவை கண்காணித்தல்
நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை சரிபார்த்து, அவர்களின் A1C ஐ அறிந்து, இரத்த அழுத்தம், கொழுப்பு, கண்கள், கால்கள் மற்றும் பற்கள் ஆகியவற்றைப் வழக்கமாக பரிசோதிக்க வேண்டும். ஏனெனில் நீரிழிவு இந்த உடல் பாகங்களில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.
ஆபத்தை குறைப்பது முக்கியம்
நீரிழிவு நோயாளிகள் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும், ஏனெனில் இது ஆபத்தை அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள், இதில் கண்கள், கால்கள் மற்றும் பற்கள் ஆகியவை அடங்கும். பரிசோதனைகளுக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.
மருந்தைத் தவிர்க்க வேண்டாம்.
நீங்கள் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் மற்றும் இன்சுலின் பற்றி தெரிந்துகொள்வதும், அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க, சரியான நேரத்தில் மருந்துகளை சரியான அளவில் எடுத்துக்கொள்வது அவசியம்.
மருத்துவரின் உதவியுடன் பிரச்சனைக்கு தீர்வு காணுதல்
நீரிழிவு நோயாளிகள் தங்கள் அவ்வப்போது அதிகரிக்கும் அல்லது குறையும் இரத்த சர்க்கரை அளவைக் கண்டறிந்து, அதற்கான காரணம் என்ன என்பதைப் மருத்துவரின் உதவியுடன் புரிந்துகொண்டு, பிரச்சனைக்கு சிகிச்சையளிப்பது மற்றும் தடுப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். இது உங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
பிரச்சனையை எதிர்கொள்ளுதல்
நீரிழிவு நோய் என்பது ஒரு முறை ஏற்பட்டால், அது நீங்காஅது, உங்கள் வாழ்நாள் முழுவதும் தொடரும்.. எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்துகளுடன் ஆதரவு தேவைப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நீரிழிவு சிகிச்சை குழுவின் உதவியைப் பெறலாம். இது இந்த நோயை எதிர்த்துப் போராட உதவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | வெள்ளை முடியை கருப்பாக்கும் தேங்காய் எண்ணெய், எலுமிச்சை, மருதாணி - எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ