டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்பாக முக்கிய சந்திப்பைத் தவிர்த்ததற்காக, 'கெளதம் கம்பீர் காணவில்லை' போஸ்டர்கள் போடப்பட்டதால் பரபரப்பு!
டெல்லி: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு தொடர்பாக நகர்ப்புற மேம்பாட்டு நாடாளுமன்ற நிலைக்குழுவின் முக்கியமான கூட்டத்தைத் தவறவிட்டதால், 'பாஜக எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கெளதம் கம்பீர் காணவில்லை' என்று சுவரொட்டிகள் தேசிய தலைநகரில் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் (Delhi Air Pollution) நாளுக்கு நாள் காற்றின் மாசு அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. காற்று மிகவும் மோசமடைந்து ஆபத்து அளவை எட்டி இருக்கிறது. தற்போது டெல்லி (Delhi) மக்கள் காற்றை சுவாசிக்க முடியாமல் திணறி வருகின்றனர். உலகிலேயே காற்று மாசு அதிகமாக இருக்கும் நகரமாக டெல்லி உருவெடுத்துள்ளது. கடந்த சில தினங்களாக டெல்லியில் மாசு கலந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலைமையை சமாளிக்க முடியாமல் அனைவரும் திணறும் நிலை உருவாகி உள்ளது. இதனால் சாலை விபத்துக்கள், ரயில் தாமதம், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லி கிழக்குத் தொகுதி பாஜக எம்.பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீரை காணவில்லை என டெல்லியில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் கம்பீரின் புகைப்படத்துடன், அவரை காணவில்லை எனவும், கடைசியாக இந்தூரில் ஜிலேபி சாப்பிடும் போது அவரை பார்த்ததாகவும் கூறப்பட்டுள்ளது. டெல்லியின் காற்று மாசு குறித்து நடைபெற இருந்த நகர்ப்புற மேம்பாட்டு நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம், எம்.பி கவுதம் கம்பீர் உட்பட சில அரசு அதிகாரிகளும் பங்கேற்காததால் தள்ளிவைக்கப்பட்டது.
Delhi: Missing posters of BJP MP and former cricketer Gautam Gambhir seen in ITO area. He had missed the Parliamentary Standing Committee of Urban Development meeting, over air pollution in Delhi, on 15th November. pic.twitter.com/cIWBtszMYZ
— ANI (@ANI) November 17, 2019
அந்த சமயத்தில் இந்தூரில் கம்பீருடன் ஜிலேபி சாப்பிட்டு கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை வி.வி.எஸ்.லக்ஷ்மன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து தான் அவரைக் காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.