இ-காமர்ஸ் இணையதளமான அமேசான் (Amazon) மீது மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) FIR பதிவு செய்துள்ளது. நிறுவனம் ஆன்லைன் மூலம் கருக்கலைப்பு மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கண்டறிந்தது. அமேசான் நிறுவனம், கருகைப்பு மருந்து விற்பனைக்கு எந்த வகையான மருந்துச் சீட்டையும் கேட்கவில்லை.
பில் இல்லாமல் மருந்து வழங்கப்படுகிறது
A-Kare பிராண்ட் கருக்கலைப்பு மருந்துக்கான ஆர்டரை அமேசான் ஏற்றுக்கொண்டதாக FDA தனது விசாரணையில் கண்டறிந்துள்ளது. இதற்கு, ஆர்டர் செய்தவரிடம் மருந்துச் சீட்டு கூட கேட்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து, 'A-Kare' பிராண்டின் கருக்கலைப்பு தொடர்பான மருந்தும் கொடுக்கப்பட்ட முகவரியில் வழங்கப்பட்டது. ஆனால், அமேசான் அதனுடன் பில்லும் கொடுக்கவில்லை.
மேலும் படிக்க | ஸ்மார்ட்டிவி வாங்க திட்டமா? சாம்சங்கின் அசத்தலான புதிய டிவிகள்!
விற்பனையாளர் ஐடி மற்றொரு நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது
கருக்கலைப்பு சம்பந்தப்பட்ட மருந்து ஒடிசாவில் இருந்து டெலிவரி செய்யப்பட்டது என்பது தெரியவந்தது. ஆனால் விசாரணையில் ஒடிசாவில் உள்ள எந்த ஒரு விற்பனையாளரிடமிருந்தும் மருந்து டெலிவரி செய்யப்படவில்லை என்பதும், விற்பனையாளர் ஐடி வேறொருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முன்பும் அமேசான் மூவர்ணக் கொடியை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. அப்போது அந்த நிறுவனம் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஒரு வாட்ஸ்அப் கணக்கை பல மொபைல்களில் ஓபன் செய்யலாம் - புதிய அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR