Election Commissioner: புதிய தேர்தல் ஆணையராக முன்னாள் IAS அதிகாரி அனூப் சந்திர பாண்டே நியமனம்

இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அனூப் சந்திர பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 9, 2021, 05:45 AM IST
  • சுஷில் சந்திரா தலைமையில் அடுத்த ஆண்டு 5 மாநில தேர்தல் நடைபெற உள்ளது.
  • இந்திய தேர்தல் ஆணையாளராக அனூப் சந்திர பாண்டே நியமனம்
Election Commissioner: புதிய தேர்தல் ஆணையராக முன்னாள் IAS அதிகாரி அனூப் சந்திர பாண்டே நியமனம் title=

கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டார்.  சுஷில் சந்திரா கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதியில் இருந்து தேர்தல் ஆணையாளராக பணியாற்றி வருகிறார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 14 ஆம் தேதி முடிவடைகிறது.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையாளராக (Election Commissioner) அனூப் சந்திர பாண்டே (62) (Anup Chandra Pandey) நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவர், உத்தர பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக (IAS Officer) பணியாற்றி ஓய்வுபெற்ற அனுபவம் கொண்டவர்.

ALSO READ | Biological-E தயாரிக்கும் Corbevax மற்ற தடுப்பூசிகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது

கடந்த 1984 ஆம் ஆண்டு உத்தர பிரதேச பிரிவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அனூப் சந்திர பாண்டேயை சேர்ந்த ஆணையராக குடியரசுத் தலைவர் நியமித்ததாக மத்திய சட்ட அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவரது இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சேர்ந்த ஆணையராக இருந்த சுனில் அரோரா கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி ஓய்வுபெற்றதையடுத்து, சுஷீல் சந்திரா தலைமைத் சேர்ந்த ஆணையராகப் பதவி உயா்வு பெற்றார். இதனால் ஒரு சேர்ந்த ஆணையர் பதவி காலியானது. அந்த இடத்துக்கு, தற்போது அனூப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் சுஷில் சந்திரா தலைமையில் கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது.

ALSO READ | பம்பர் செய்தி: COVID-19 தடுப்பூசி போட்டவர்களுக்கு FD-யில் அதிக வட்டியை வழங்குகின்றன இந்த வங்கிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News