குஜராத்: நமக்கு தெரிந்தவரை கால்நடைகள் பொதுவாக புற்கள், வைக்கோல், அதற்கென வைக்கப்படும் தவிடு, புண்ணாக்கு போன்ற தீவனங்களை தான் உண்ணும். ஆனால் இப்போதுள்ள கால்நடைகளோ காகிதம், நெகிழி போன்றவற்றை உண்டு பாதிப்பிற்குள்ளாகி வருகிறது. நகரமயமாதலால் பல இடங்கள் குப்பை கிடங்குகளாக மாறி வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவதால் பூமி பாதிக்கப்படும் என்று எவ்வவளவு எடுத்து கூறினாலும், அதன் பயன்பாடு குறைவதாக தெரியவில்லை. பிளாஸ்டிக்கால் அதிகம் பாதிக்கப்படுத்து கால்நடைகள் தான், இதனால் அவை உடல்நிலை பாதிக்கப்பட்டு இறக்கும் நிலை கூட ஏற்பட்டு விடுகிறது.
ALSO READ இந்தியாவில் நுழைந்துவிட்டதா Omicron? டெல்லிக்கு வந்த 4 வெளிநாட்டு பயணிகளால் பீதி
இதுபோன்ற காரணத்தால் குஜராத்தில் ஒரு பசுவின் வயிற்றில் 77 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது அதனை மருத்துவர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள பசு ஒன்று சில நாட்களாக உணவு மற்றும் நீர் எதுவும் அருந்தாமல் சுறுசுறுப்பற்று நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளது. இதனை கண்ட தன்னார்வ அமைப்பினர் சிலர் அந்த பசுவை மீட்டு குஜராத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். அங்கு அந்த பசுவை பரிசோதனை செய்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது அனுமதிக்கப்பட்ட அந்த பசுவின் வயிற்றில் குப்பைகளில் எறியக்கூடிய ஐஸ்கிரீம் கப், ஸ்பூன் மற்றும் பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட பல பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் இருந்துள்ளது. பின்னர் கால்நடை மருத்துவர்கள் ஒன்றிணைந்து பசுவின் வயிற்றில் உள்ள அந்த கழிவு பொருட்களை அகற்ற சிகிச்சை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி அந்த பசுவின் வயிற்றில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் போராடி அகற்றினர்.
இந்த அறுவை சிகிச்சை குறித்து டாக்டர்கள் கூறுகையில், "பசுவின் வயிற்றில் இருந்து நாங்கள் அகற்றிய பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் பொதுமக்கள் சாப்பிட்டுவிட்டு சாலைகளில் வீசிய குப்பைகள் தான். பொதுமக்கள் இவ்வாறு பொதுவெளிகளில் செய்யும் தவறான செயல்களால் வாயில்லாத ஜீவன்களான கால்நடைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இது முதல் முறை முறையல்ல, கால்நடைகளுக்கு இது போன்ற அறுவை சிகிச்சை தொடர்ந்து பலமுறை நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதனை மக்கள் கவனத்தில் கொண்டு இனிமேல் இதுபோல் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ALSO READ இந்தியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான்; தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR