டிஷ் டிவியின் முடக்கம் விவகாரம்: அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இருந்து யெஸ் வங்கிக்கு பெரும் பின்னடைவு

டிஷ் டிவியின் முடக்கம் விவகாரம் யெஸ் வங்கிக்கு பெரும் பின்னடைவை  ஏற்படுத்தியுள்ளது.  இதனையடுத்து யெஸ் வங்கி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 27, 2021, 08:35 PM IST
டிஷ் டிவியின் முடக்கம் விவகாரம்: அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இருந்து யெஸ் வங்கிக்கு பெரும் பின்னடைவு title=

டிஷ் டிவி இந்தியாவில் 24.19 சதவீத பங்குகளை யெஸ் வங்கியில் வைத்துள்ளது. இந்நிலையில் இந்த பங்குகளில் உரிமையை பயன்படுத்த முடியாத வகையில் உத்தரபிரதேசத்தின் கெளதம் புத் நகர் போலீசாரால் முடக்கப்பட்ட  வழக்கில் தலையிட அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. . இந்த விவகாரம் யெஸ் வங்கிக்கு பெரும் பின்னடைவை  ஏற்படுத்தியுள்ளது.  இதனையடுத்து யெஸ் வங்கி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய விபரங்களை காணலாம்:-

டிஷ் டிவி விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் யெஸ் வங்கி பெரும் அவமானத்தை சந்தித்துள்ளது.

அதோடு அலகாபாத் உயர்நீதிமன்றம் FIR-ஐ ரத்து செய்யவும், விசாரணையை நிறுத்தவும் மறுத்துவிட்டது.

மேலும், உண்மையான விசாரணையை நிறுத்துவது சரியானதல்ல என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது

மிகப்பெரிய இந்த விவகாரத்தில், போதிய விபரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

எனவே டிஷ் டிவி விவகாரத்தில் ஆதாரங்கள் இன்னும் சேகரிக்கப்படவில்லை, எனவே விசாரணையின் நடுவில் தலையிடுவது சரியல்ல

தேவையான ஆதாரங்கள் கிடைக்காமல் இந்த வழக்கை சரியான கண்ணோட்டத்தில் பார்ப்பது கடினம் என்று நீதிமன்றம் கூறியது.

அதுமட்டுமல்லாமல் யெஸ் வங்கி முதலில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது

 டிஷ் டிவி விவகாரத்தில் அரசு தரப்பில் இருந்து இன்னும் பதில் அளிக்கவில்லை.

இந்த வழக்கில் பிரதிவாதி இல்லாத போது இதில் என்ன பிரச்சனை என்று அரசு கூறியுள்ளது

மேலும், FIR-ல் வங்கி குற்றம் சாட்டப்படவில்லை, பின்னர் ஏன் FIR-ஐ  ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வாங்கி தரப்பில் வைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் யெஸ் வங்கி மீது அரசு கவுன்சில் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது

சித்தரிக்கப்பட்ட ஆதாரங்கள் மூலம் யெஸ் வங்கி இந்த வழக்கில் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது எனவும் அலஹாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

ALSO READ Good News! Sputnik light கோவிட் தடுப்பூசி டிசம்பரில் இந்தியாவில் அறிமுகம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR 

Trending News