வரிசையில் நின்று வங்கியில் பணத்தை பெற்ற பிரதமரின் தாயார்!!

Last Updated : Nov 15, 2016, 01:53 PM IST
வரிசையில் நின்று வங்கியில் பணத்தை பெற்ற பிரதமரின் தாயார்!! title=

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் வங்கிக்கு வந்து முறைப்படி வரிசையில் காத்திருந்து தனது செலவுக்காக பணம் எடுத்து சென்றார்.  

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற அறிவுறுத்தப்பட்டது. இதனால் மக்கள் வங்கிகளில் அலை மோதினர். நீண்ட வரிசையில் நின்று தங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்றி செல்கின்றனர்.

இந்நிலையில் ஆமதாபாத்தில் இன்று பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் வங்கிக்கு வந்தார். தள்ளாடியபடியே அவர் வரிசையில் நின்றார். அவரிடம் இருந்த 500 ரூபாய் நோட்டுகள் (மொத்தம் 4500 ரூபாய் ) முறைப்படி வங்கி படிவத்தில் ஊழியர்கள் துணையுடன் நிரப்பி கொடுத்தார். தனது அடையாள அட்டையையும் காட்டினார். பின்னர் வங்கி அதிகாரிகள் ஹீராபென்னிடம் புதிய 2 ஆயிரம் மற்றும் சில கரன்சிகளை அவரிடம் கொடுத்தனர். பின்னர் அவர் வங்கியில் இருந்து புறப்பட்டு சென்றார். 

பிரதமர் மோடியின் தாயாரே வங்கிக்கு வந்து வரிசையில் நின்று பணத்தை பெற்றுச் சென்றது நாடு முழுவதும் பரவலாக பேசப்படுகிறது.

 

 

 

Trending News