டெல்லி மாநில புற்றுநோய் மருத்துவமனை அடைக்கப்பட்டது; காரணம் என்ன?

டெல்லி மாநில புற்றுநோய் மருத்துவமனையில் 35 வயதான மருத்துவர் கொரோனா வைரஸ் நோய்க்கு சாதகமாக பரிசோதனை முடிவு பெற்றுள்ள நிலையில், மருத்துவமனையின் வெளி-நோயாளி கிளினிக்குகளை இடைநிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Last Updated : Apr 1, 2020, 01:46 PM IST
டெல்லி மாநில புற்றுநோய் மருத்துவமனை அடைக்கப்பட்டது; காரணம் என்ன? title=

டெல்லி மாநில புற்றுநோய் மருத்துவமனையில் 35 வயதான மருத்துவர் கொரோனா வைரஸ் நோய்க்கு சாதகமாக பரிசோதனை முடிவு பெற்றுள்ள நிலையில், மருத்துவமனையின் வெளி-நோயாளி கிளினிக்குகளை இடைநிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் தடுப்பு புற்றுநோயியல் துறையைச் சேர்ந்த மருத்துவர் ரோஹினியில் உள்ள டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி மற்றும் குழந்தை டெல்லி கேட் அருகே உள்ள லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர் தொற்றுநோய்க்கான ஆதாரம் தெளிவாக இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

"அவருக்கு வெளிநாட்டு பயணம் அல்லது எந்த கோவிட் -19 நோயாளிகளுக்கும் சிகிச்சையளித்த வரலாறு இல்லை. எனவே, நோய்த்தொற்றின் ஆதாரம் இன்னும் கேள்விக்குறியாக உள்ளது,” என்று டெல்லி அரசாங்கத்தின் சுகாதாரத் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"அவரது சகோதரர் மற்றும் மைத்துனர் பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு பயணம் செய்தனர், ஆனால் அவர்கள் நோய்த்தொற்றுக்கு சாதகமான முடிவு பெறவில்லை" என்றும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

கொரோனா அடுத்து முழுஅடைப்பு அமுல் படுத்தப்பட்டதிலிருந்து டெல்லி மாநில புற்றுநோய் மருத்துவமனை OPD-ல் சுமார் 100-150 புற்றுநோயாளிகளைக் கண்டுள்ளது. அதற்கு முன், OPD வருகை ஒரு நாளைக்கு 1000 முதல் 1500 வரை இருந்தது. எனினும் தற்போது மருத்துவமனையில் மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மருத்துவமனை முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி மாநில புற்றுநோய் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பி.எல். ஷெர்வால் தெரிவிக்கையில்., "நாங்கள் ஒரு ஆபத்தை எடுக்க முடியாது. கவனிப்பு தேவைப்படும் புற்றுநோய் நோயாளி மட்டுமே இப்போது மருத்துவமனைக்கு வருகிறார்கள், அவர்கள் நோயெதிர்ப்பு குறைபாடுடையவர்கள். யாரும் அதைப் பெறாமல் இருக்க வளாகத்தை சுத்தப்படுத்த OPD-ஐ மூட வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

Trending News