பொங்கலுக்கு பனங்கிழங்கு சாப்பிட்டால் இதையும் சேர்த்து சாப்பிடுங்க... இல்லனா பிரச்னை தான்!

Pongal 2025: பொங்கல் அன்று நீங்கள் பனங்கிழங்கை (Palmyra Tuber) சற்று அதிகமாக சாப்பிட்டால் இதனை செய்ய மறக்காதீர்கள். தவிர்த்தால், உடல் நல பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.

பொங்கலுக்கு கரும்பு மற்றும் பனங்கிழங்கு ஆகியவற்றை சாப்பிடுவது வழக்கம். பனங்கிழங்கை நம் வீட்டில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு அவித்து சிறிது சிறிதாக வெட்டியோ, முழமையாகவோ அதை சாப்பிடுவார்கள்.

 
1 /8

போகி பண்டிகை இன்று கொண்டாடப்படும் வேளையில், தமிழர் திருநாளான தைப் பொங்கல் பண்டிகை நாளை (ஜன. 14) கொண்டாடப்படுகிறது.   

2 /8

தை பொங்கலை (Pongal 2025) தொடர்ந்து ஜன. 15ஆம் தேதி மாட்டுப் பொங்கல், ஜன. 16ஆம் தேதி காணும் பொங்கல் ஆகியவை கொண்டாடப்பட இருக்கிறது.   

3 /8

தைப் பொங்கலை முன்னிட்டு அனைவரும் வீடுகளில் பொங்கல் வைப்பார்கள். அதில் பச்சரிசி பொங்கல், சர்க்கரை பொங்கலை செய்து உண்பார்கள்.   

4 /8

மேலும், கரும்பு மற்றும் பனங்கிழங்கு ஆகியவையும் பொங்கலுக்கு அதிகம் உண்பார்கள். இதில் பனங்கிழங்கு சீசன் நவம்பர் மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரைதான் இருக்கும்.   

5 /8

அப்படியிருக்க பொங்கலை முன்னிட்டு பலரும் வீட்டில் பனங்கிழங்கை வேகவைத்து, மஞ்சள் தூள், உப்பு மட்டும் கலந்து உண்பார்கள். பனங்கிழங்கில் அதிக நார்ச்சத்து இருப்பதால் வயிறு சார்ந்த கோளாறுகள், சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகள் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் பனங்கிழங்கு அதிகரிக்கச் செய்யும்.    

6 /8

நார்ச்சத்து மட்டுமின்றி புரதம் மற்றும் இரும்புச்சத்தும் இருக்கிறது. கால்சியம், மேக்னீஸியம் போன்ற தாதுக்களும் இருக்கின்றன. இதனால் எலும்புகள், தசைகள் வலுவாகும். கீல்வாதம் போன்ற பிரச்னை வராது. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் கர்ப்பிணிகள் பெண்களும் கூட இதனை சாப்பிடலாம். மேலும் இது ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.   

7 /8

பனங்கிழங்கில் பித்தம் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. எனவே, பனங்கிழங்கை சாப்பிட்டால் 5-6 மிளகையும் உட்கொண்டால் பிரச்னை தீரும். பனங்கிழங்கை அதிகம் சாப்பிடுவதால் வாயு தொல்லையும் ஏற்படலாம். எனவே, நீங்கள் பனங்கிழங்குடன் மிளகு, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து சாப்பிட்டால் வாயு பிரச்னை வராது.  

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியம் சார்ந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை.