குறைந்தபட்ச செயல் திட்டம் மூலம் காற்று மாசை குறைக்க வழிவகை செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் டில் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதைக் கட்டுப்படுத்தக் கோரி தொடரப்பட்ட பொது நலன் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. பொதுமக்களி ன் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவசர வழக்காக இதை விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு மீது விசாரணை இன்று நடத்தப்பட்டது. அப்போது நீதிபதிகள், டில்லியில் நிலவும் காற்று மாசை கட்டுப்படுத்த மத்திய அரசு குறைந்த பட்ச செயல்தி ட்டத்தை உருவாக்க வேண்டும். இதனை 48 மணி நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்க கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.