புதுடெல்லி: இந்தியாவின் தினசரி பதிவாகும் பிதிய COVID-19 தொற்றுகள் 4,00,000 என்ற அளவில் இருந்து சற்றே குறைந்துள்ளது. திங்கள்கிழமை (மே 10) அன்று பதிவான தினசரி இறப்பு எண்ணிக்கையும் 4,000 என்ற அளவில் இருந்து குறைந்துள்ளது
சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 366,161 பேருக்கு, கடந்தஃ 24 மணி நேரத்தில், புதிதாக COVID-19 தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், 3,754 பேர் இறந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2. 26 கோடியாக அதிகரித்துள்ளது மொத்த இறப்புகள் எண்ணிக்கை 2,46,116 .
நாட்டில் சிகிச்சையில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் 37,45,237 என்ற அளவில் உள்ளது, இது அதன் மொத்த எண்ணிக்கையில் 16.53 சதவீதமாக உள்ளது, அதே நேரத்தில் தேசிய அளவில் கோவிட் -19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 82.39 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இந்த நோயிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,86,71,222 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.09 சதவீதமாக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் கோவிட் -19 எண்ணிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 ஆம் தேதி 40 லட்சத்தையும், செப்டம்பர் 16 ஆம் தேதி 50 லட்சத்தையும் தாண்டியது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | கொரோனா காலத்தில் நோய் எதிப்பு சக்தியை அள்ளிக் கொடுக்கும் கற்றாழை, வேம்பு!
மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை, செப்டம்பர் 28 அன்று 60 லட்சத்தையும், அக்டோபர் 11 அன்று 70 லட்சத்தையும், அக்டோபர் 29 அன்று 80 லட்சத்தையும், நவம்பர் 20 ஆம் தேதி 90 லட்சத்தையும், கடந்த ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி ஒரு கோடி என்ற அளவையும் தாண்டியது. இந்த எண்ணிக்கை மே 4 அன்று இரண்டு கோடி என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அளித்த தகவலின் படி, ஞாயிற்றுக்கிழமை 14,74,606 பேர்ருக்கு நடத்தப்பட்ட பரிசோதனை உட்பட, நாடு முழுவதும் இதுவரை 30,37,50,077 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
ALSO READ | #PIBFactCheck: 12+ குழந்தைகளுக்கு கோவேக்ஸின் அனுமதி? அரசு கூறுவது என்ன
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR