₹150 என்ற விலை கட்டுபடியாகாது; மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்: Bharat Biotech

பாரத் பயோடெக் இதுவரை கோவேக்ஸின் தயாரிப்பு பணிகளை மேம்படுத்துதல், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கோவாக்சின் உற்பத்திக்கான வசதிகளை அமைத்தல் ஆகியவற்றிற்காக  சொந்தமாக ரூ .500 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 15, 2021, 04:01 PM IST
  • உள்நாட்டு தயாரிப்பான கோவேக்ஸின் பாரத் பயோடெக் தயாரித்த தடுப்பூசியாகும்
  • பாரத் பயோடெக் கோவாக்சினுக்கு அதிக விலை கோருகிறது
  • ஒரு டோஸுக்கு ரூ.150 என்பது கட்டுபடியாகக் கூடிய விலை அல்ல.
₹150 என்ற விலை கட்டுபடியாகாது; மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்: Bharat Biotech title=

ஹைதராபாத்தைச் சேர்ந்த கோவிட் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் செவ்வாய்க்கிழமை தனது கோவாக்சின் தடுப்பூசிக்கு மத்திய அரசு வழங்கும் ஒரு டோஸுக்கு ரூ .150 என்ற விலை கட்டுபடியாகும் விலை அல்ல என்று, நீண்ட காலத்திற்கு அந்த விலையில் கொடுப்பது சாத்தியம் அல்ல என்று தெரிவித்துள்ளது. தடுப்பூசி உற்பத்தி செலவுகளை ஈடுசெய்ய தனியார் சந்தைகளில் அதிக விலையில் விற்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

"இந்திய அரசாங்கத்திற்கு கோவாக்சின் ஒரு டோஸுக்கு ரூ .150  என்ற அளவில் விற்கப்படுகிறது. இது கட்டுபடியாகும் விலை இல்லை. எனவே தயாரிப்பு செலவுகளை ஈடுசெய்ய தனியார் சந்தைகளில் அதிக விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது," நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ALSO READ | COVID-19 தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போதுமானது: ஆய்வு

தடுப்பூசி விலை நிர்ணயம் பல காரணிகளைப் பொறுத்தது. தடுப்பூசிகள் (Corona Vaccine) மற்றும் பிற மருந்து தயாரிப்புகளின் விலை நிர்ணயம் அதனை தயாரிக்க தேவையான மூலப்பொருட்களின் விலை, தயாரிப்பில் ஏற்படும் இழப்புகள், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான செலவுகள், போதுமான உற்பத்தி வசதிகளை அமைப்பதற்கான மூலதன செலவு, விற்பனை மற்றும் விநியோக செலவுகள், கொள்முதல் அளவுகள் போன்ற பல தரப்பட்ட செலவுகளை தவிர மற்ற வழக்கமான நிர்வாக மற்றும் வணிக செலவுகள் ஆகியவற்றை பொறுத்தது''  என நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

பாரத் பயோடெக் இதுவரை COVID-19  தொற்றுக்கு எதிரான கோவேக்ஸின் தயாரிப்பு பணிகளை மேம்படுத்துதல், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கோவாக்சின் உற்பத்திக்கான வசதிகளை அமைத்தல் ஆகியவற்றிற்காக  சொந்தமாக ரூ .500 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது.

ALSO READ | COVID-19: குழந்தைகளைப் பாதுகாக்க ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News