கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பார்வையிடுகிறார்...!
கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 324 பேர் பலியாகியுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கிய சுமார் 10 லட்சம் பேர் மீட்கப்பட்டு அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தற்போது மழை நின்றுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கேரள வெள்ள நிவாரணத்திற்கு உலக நாடுகள், இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெள்ள பாதிப்புகளை பார்வையிட உள்ளார். இதன் முதற்கட்டமாக ஆலப்புழா, திருச்சூர், எர்ணாகுளம் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை இன்று சந்திக்கிறார்.
Congress President Rahul Gandhi visits a relief camp in Chengannur. He is on a 2-day visit to the flood-hit Kerala. #KeralaFloods pic.twitter.com/6G6pCqgBo5
— ANI (@ANI) August 28, 2018
அதன்படி, இன்று மட்டும் 9 முகாம்களுக்கு நேரில் சென்று பார்வையிடுகிறார். அடுத்தபடியாக, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்திற்கு நாளை செல்லும் ராகுல், அங்குள்ள 3 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க உள்ளார்.