காங்கிரஸ் கட்சி தனது ஜமாத்-ஈ- இஸ்லாமி, PFI குறித்த தனது நிலைப்பட்டை காங்கிரஸ் தெளிவு படுத்த வேண்டும் என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, இதுதேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என கூறினார்.
PFI போன்ற தீவிரவாத அமைப்புகளை பீகாரிலும் ஊக்குவிக்க காங்கிரஸ் (Congress) கட்சியின் கூட்டணி கட்சியின் தலைவரான தேஜாஷ்வி யாதவ் திட்டமிட்டுள்ளாரா என்றும் பாஜக கட்சி கேள்வி எழுப்பியுள்ளது
கேரளாவில் ஜமாத்-ஈ-இஸ்லாமியின் அரசியல் அமைப்பான வெல்பேர் கட்சியுடன் கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வாக்கு வங்கி அரசியலுக்காக, மதசார்பற்ற கட்சி எனக் கூறிக் கொண்டு தீவிரவாதத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது என பாஜகவை (BJP) சேர்ந்த மத்திய அமைச்சர் முக்தார் அபாஸ் நக்வி கூறினார்
"காங்கிரசுடன் சேர்ந்து, அதன் கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளமும் (RJD) ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் பீகாரில் உள்ள பிற தீவிரவாத அமைப்புகளுடன் ஒப்பந்தம் ஏதும் ஏற்படுத்தியுள்ளதா என்று நாங்கள் தேஜாஷ்வி யாதவிடம் கேட்க விரும்புகிறோம். இவை தேசிய பாதுகாப்பு தொடர்பான கேள்விகள், அரசியல் அல்ல" என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும் பாஜக தலைவரும் ஆன முக்தார் அப்பாஸ் நக்வி (Mukhtar Abbas Naqvi) தெரிவித்தார்.
காங்கிரஸுக்கு, ஜமாத்-ஈ-இஸ்லாமியுடன் எந்த தொடர்பும் இல்லை என்று நேற்று காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
"கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளம் ஆகியவற்றில் நான் கொடுத்த அறிக்கையை நீங்கள் ஏன் பார்க்கவில்லை? காங்கிரசுக்கு வெல்பேர் கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்தினேன். ஜம்மாத்-ஈ-இஸ்லாமிக்கு காங்கிரசுடன் எந்த தொடர்பும் இல்லை," ராமச்சந்திரன் கூறினார்.
ராகுல் காந்தி (Rahul gandhi) மாநிலத்திற்கு பயணம் செய்த உடனேயே ஒரு பயங்கரவாதக் குழுவுடன் காங்கிரஸ் கலந்துரையாடியதாக மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான வி.முரளீதரன் கூறிய குற்றச்சாட்டு குறித்து கருத்து கூறிய திரு.ராமச்சந்திரன், "இல்லவே இல்லை. இது முற்றிலும் தவறான செய்தியாகும். எந்தவொரு பயங்கரவாதக் குழுவுடனும் நாங்கள் ஆலோசனை செய்ததாக ஏதேனும் ஒரு சமபவத்தை சுட்டிக் காட்ட முடியுமா? முரளீதரன் காங்கிரஸ் கட்சியில் பிரச்சினைகளை உருவாக்க விரும்புகிறார். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் போதுமான அளவு பிரச்சினைகள் உள்ளன" என்றார்.
ALSO READ | மிலிட்டரி கேண்டீனில் சீன பொருட்கள், இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம் விற்க தடையா..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR