புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கடந்த 10 மாதங்களாக கடுமையான இராணுவ பதற்றம் நிலவி வரும் நிலையில் சீன வீரர் ஒருவர் லடாக்கில் உள்ள எல்லை பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பங்கோங் ஏரிக்கு தெற்கே உள்ள பகுதியில் பிடிபட்டார். அந்த சீன சிப்பாயை இந்திய ராணுவமும் உளவுத்துறையும் விசாரணை செய்து வருகின்றன.
பாங்கோங் ஏரியின் தெற்கு பகுதியில் சீன சிப்பாய் பிடிபட்டார்
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) சீன சிப்பாய் ஜனவரி 8 ஆம் தேதி எல்லை பகுதியை கடந்து இந்திய பகுதியை அடைந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு அவரை அங்கு பணியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய வீரர்களிடம் பிடிபட்டார். இந்த சீன (China) சிப்பாயை பாங்காங் ஏரியின் தெற்கு பகுதியில் இருந்து செய்யததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பி.எல்.ஏ.வுக்கு கைது செய்யப்பட்டது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது.
பிடிபட்ட சீன சிப்பாயை இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகள் விசாரிக்கின்றன. சீன சிப்பாய் தான் வழி தவறி இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறினார். அவர் கூறியதில் எந்த அளவில் உண்மை உள்ளது என்பதை அறிய இந்திய ராணுவம் (Indian Army) விசாரணையில் ஈடுபட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டது தொடர்பான தகவல் சீன படைக்கு வழங்கப்பட்டுள்ளது.
ALSO READ | இந்தியாவின் தடுப்பூசிக்காக உலகம் காத்திருக்கிறது : பிரதமர் மோடி
சீன சிப்பாயிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையில் கடைபிடிக்கப்படும் நெறிமுறையின் கீழ் சீன சிப்பாய் விசாரிக்கப்படுவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சீன சிப்பாய் எந்த சூழ்நிலையில் எல்லை கடந்து வந்துள்ளார் என்பதை இராணுவம் விசாரித்து வருகிறது. இந்திய ராணுவ விசாரணையில் சீன சிப்பாயின் கூற்று உண்மை என நிரூபிக்கப்பட்டால், அனைத்து வழிமுறைகளையும் முடித்த பின்னர், அவர் திருப்பி அனுப்பப்படுவார்.
ஜூன் 15 அன்று இந்திய வீரர்கள் மீது நடந்த தாக்குதல்
லடாக்கில் (Ladakh) சீனர்கள் அத்துமீறி நுழைந்ததிலிருந்து, இரு நாடுகளை சேர்ந்த சுமார் 50-50 ஆயிரம் வீரர்கள் எல்லையில் கனரக ஆயுதங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளனர். ஜூன் 15 அன்று, சீனாவைச் சேர்ந்த வீரர்கள் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய துருப்புக்களை கூர்மையான ஆயுதங்களால் தாக்கினர், அதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதை அடுத்து இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் 50 க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஆகஸ்ட் 29 அன்று இந்திய இராணுவம் முக்கிய மலை பகுதிகளை கைப்பற்றியது
ஃபிங்கர் 4 முதல் 8 வரையிலான பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் சதி நடவடிக்கைகளை கண்டறிந்த, இந்திய இராணுவம் ஆகஸ்ட் 29-30 இரவு பாங்கோங் (Pangong) ஏரிக்கு தெற்கே உள்ள மலைகளைக் கைப்பற்றியது. 1962 போருக்குப் பிறகு, இந்திய இராணுவம் முதன்முறையாக இந்த பகுதியை தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையே தீர்வு ஏதும் ஏற்படவில்லை
அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. ஆகஸ்டில் இந்தியா ஆக்கிரமித்திருந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சிகரங்களிலிருந்து பின்வாங்க வேண்டும் என்று சீனா விரும்புகிறது. அதே நேரத்தில், ஏப்ரல் 2020 க்கு முன்னர் எல் ஏ சியில் எந்த நிலை இருந்ததோ, அதே நிலைக்கு இரு தரப்பும் திரும்ப வேண்டும் என மீட்டெடுக்க இந்தியா கூறுகிறது.
ALSO READ | சீன கடலில் சிக்கி தவிக்கும் இந்திய மாலுமிகள் ஜனவரி 14ம் தேதி திரும்புவார்கள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR