கடத்தும் அளவு கீழிறங்கிவிட்டதா சீனா? எல்லையில் குழப்பம் நிறைந்த பீதி!!

சமீபத்தில் மாஸ்கோவில் இந்தியா சீனா பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையில் இரண்டரை மணி நேர சந்திப்பு நடைபெற்றது. இதில் கால்வன் மற்றும் லடாக் குறித்து தீவிர விவாதம் நடைபெற்றது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 7, 2020, 10:46 PM IST
  • எல்லையில் உள்ள பதட்டமான நிலைமைக்கு சீனா இந்தியாவை குற்றம் சாட்டியது.
  • 5 இளைஞர்கள் காணாமல் போனது குறித்து விசாரிக்க இராணுவம் எல்லைப் பகுதிக்கு ஒரு போலீஸ் குழுவை அனுப்பியுள்ளது.
  • PLA படையினரால் இளைஞர்கள் கடத்தப்பட்டதை அருணாச்சல பிரதேச டிஜிபி உறுதிப்படுத்தவில்லை.
கடத்தும் அளவு கீழிறங்கிவிட்டதா சீனா? எல்லையில் குழப்பம் நிறைந்த பீதி!! title=

புதுடெல்லி: LAC-ல் இந்தியா சீனா இடையிலான பதட்டம் இன்னும் தொடர்கிறது. சமீபத்தில் மாஸ்கோவில் இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையில் இரண்டரை மணி நேர சந்திப்பு நடைபெற்றது. இதில் கால்வன் மற்றும் லடாக் (Ladakh) குறித்து தீவிர விவாதம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர், எல்லையில் உள்ள பதட்டமான நிலைமைக்கு சீனா (China) இந்தியாவை குற்றம் சாட்டியது. இப்போது டிராகன் அருணாச்சல பிரதேசத்திற்கு உரிமை கோரியுள்ளது.

சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் (Zhao Lijian) திங்களன்று (செப்டம்பர் 7) ஒரு அறிக்கையை வெளியிட்டார். "சீனாவின் 'தெற்கு திபெத்' பகுதியான அருணாச்சல பிரதேசத்தை சீனா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை.” என்று அவர் குறியுள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 5 இந்திய (India) இளைஞர்கள் காணாமல் போனதை அடுத்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் இந்த அறிக்கை வந்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் இருந்து காணாமல் போன 5 இந்தியர்கள் குறித்து லிசினிடம் கேட்டபோது, ​​அவர் மௌனம் காத்து, இது தொடர்பாக தனக்கு எந்த தகவலும் இல்லை என்று கூறினார்.

ALSO READ: எல்லையில் 5 சிறுவர்களை கடத்தியுள்ளதா சீன ராணுவம்? லடாக்கில் குழப்பம் நிறைந்த பீதி!!

சீன இராணுவம் இளைஞர்களை கடத்தியுள்ளதா?

அருணாச்சல பிரதேசத்தின் மேல் சுபன்சிரி மாவட்டத்தில் இருந்து சீன இராணுவத்தின் மக்கள் விடுதலை இராணுவத் துருப்புக்களால் (PLA) ஐந்து பேரைர் கடத்தப்பட்ட பிரச்சினையை இந்திய ராணுவம் சீன ராணுவத்திடம் (Chinese Army) எழுப்பியுள்ளது. 5 இளைஞர்களைக் கடத்தியது குறித்து விசாரிக்க இராணுவம் மெக்மஹோன் கோட்டை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிக்கு ஒரு போலீஸ் குழுவை அனுப்பியுள்ளது. இந்த பகுதி திபெத்திலிருந்து மேல் சுபன்சிரி மாவட்டத்தை பிரிக்கிறது.

இது தொடர்பாக இந்திய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்ணல் ஹர்ஷ் வர்தன் பாண்டே கூறுகையில், "நாங்கள் எங்கள் படைகளை எச்சரிக்கை நிலையில் வைத்துள்ளோம். சிவில் சமூகத்துடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளோம். மேலும் உயர் சுபன்சிரியின் எஸ்.பி., யாரும் இதுவரை காணாமல் போனதாக புகார் எதுவும் வரவில்லை” என்று கூறியுள்ளார்.

“நாங்கள் சீனாவுடன் ஹாட்லைனில் உரையாடினோம். ‘இப்பகுதியைச் சேர்ந்த சிலர் தெரியாமல் உங்கள் எல்லைக்குள் வந்து விட்டனர், நீங்கள் அவர்களை திருப்பி கொடுத்தால் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்’ என்று கூறியுள்ளோம்" என்று பாண்டே தெரிவித்தார்.

அவர் மேலும், "இந்த பகுதியில் காடு அல்லது மலைகள் வழியாக எந்த எல்லைக்கோடும் செல்லவில்லை. ஆகையால், இந்தப் பக்கங்களில் சுற்றிக்கொண்டிருக்கும் போது அவர்கள் தெரியாமல் எல்லையைத் தாண்டி சென்றிருக்கலாம். இது மிகவும் பொதுவான ஒரு விஷயம்." என்று விளக்கினார். காணாமல் போன இந்த 5 இந்திய இளைஞர்கள் டோச் சிங்கம், பிரசாத் ரிங்லிங், டோங்டு அபியா, தனு பக்கரே மற்றும் கரு டிரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தகராறைக் கருத்தில் கொண்டு கிழக்கு லடாக்கில் 3,400 கி.மீ நீளமுள்ள LAC வழியாக இந்தியா தனது படைகளை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில்தான் அருணாச்சல பிரதேசத்தில் (Arunachal Pradesh) இருந்து ஐந்து பேர் காணாமல் போன செய்தி வந்தது. இது தொடர்பாக PLA படையினரால் இளைஞர்கள் கடத்தப்பட்டதை அருணாச்சல பிரதேச டிஜிபி உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், இந்த வழக்கை இந்திய ராணுவம் விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

ALSO READ: "அமைதி ஏற்பட நம்பிக்கை தேவை": சீன பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில் ராஜ்நாத் சிங்

Trending News