சட்டப்பிரிவு 371-ஐ மத்திய அரசு எந்த விதத்திலும் மாற்றாது: அமித்ஷா..!

சட்டப்பிரிவு 371 காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 ல் இருந்து வேறுப்பட்டது எனவும், அதனை மத்திய அரசு மாற்றாது எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்!!

Last Updated : Sep 8, 2019, 06:55 PM IST
சட்டப்பிரிவு 371-ஐ மத்திய அரசு எந்த விதத்திலும் மாற்றாது: அமித்ஷா..! title=

சட்டப்பிரிவு 371 காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 ல் இருந்து வேறுப்பட்டது எனவும், அதனை மத்திய அரசு மாற்றாது எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்!!

அசாம் மாநிலம், குவஹாத்தியில் நடைபெற்ற 68-வது வடகிழக்கு கவுன்சிலின் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 371 என்பது வடகிழக்கு மாநிலத்திற்கான சிறப்பு விதி என்றும் சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிக இயல்பு கொண்டது எனவும் இரண்டும் வேறுபட்டது எனவும் தெரிவித்தார். 

மேலும், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 திரும்பபெறப்பட்டதை தொடர்ந்து 371 வது சட்டப்பிரிவையும் மத்திய அரசு ரத்துசெய்யும் என கூறி சிலர் வடகிழக்கு மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட அவர்,  371வது சட்டப்பிரிவில் எந்த மாற்றமும் வராது என நாடாளுமன்றத்திலேயே தெளிவுபடுத்தியதை சுட்டிக்காட்டினார். 

தொடர்ந்து பேசிய அவர், வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த 8 முதலமைச்சர்கள் முன்னிலையில் இன்று மீண்டும் கூறுவதாக தெரிவித்த அவர், வடகிழக்கின் ஆறு மாநிலங்கள் உட்பட 11 மாநிலங்களுக்கான "சிறப்பு விதிகள்" அடங்கிய அரசியலமைப்பின் 371 வது பிரிவை அகற்றும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என உறுதிபட தெரிவித்தார். 

மேலும்,  ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த தனித்துவமான சூழ்நிலைகள் மற்றும் அந்த நேரத்தில் பேச்சுவார்த்தையின் போது இந்திய அரசு அந்த மாநிலத்திற்கு வழங்கிய குறிப்பிட்ட உத்தரவாதங்கள் காரணமாகவே 370வது சட்டப்பிரிவு திரும்பபெறப்பட்டதாக அமித்ஷா விளக்கம் அளித்தார்.

 

Trending News