இந்தியாவில் விரைவில் 5ஜி - ஏலத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு

5G Spectrum Auction : இந்தியாவில் 5-ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை மாதத்திற்குள் 5-ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - Chithira Rekha | Last Updated : Jun 15, 2022, 02:23 PM IST
  • 5-ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • ஜூலை மாதத்திற்குள் ஏலம் நடைபெறும் எனத் தகவல்
  • 20 ஆண்டுகளுக்கு ஏலம் விடப்படும் ஸ்பெக்ட்ரம்
இந்தியாவில் விரைவில் 5ஜி - ஏலத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு title=

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 5-ஜி சேவைக்காக ஸ்பெக்ட்ரம் ஏலத்தை நடத்துவதற்கான தொலைத்தொடர்புத் துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரும் ஜூலை மாத இறுதிக்குள் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெற உள்ளது. ஏலத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 5-ஜி சேவை வழங்குவதற்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்படும். 

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செலவைக் குறைக்க  72097.85 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் 20 ஆண்டுகளுக்கு ஏலம் விடப்படுகிறது. நாட்டின் மூன்று முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான வோடபோன் ஐடியா, ஏர்டெல் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஜியோ ஆகியவை இந்த ஏலத்தில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | மம்தாவின் கூட்டத்தைப் புறக்கணித்த சந்திர சேகர ராவ்

5-ஜி சேவை தற்போதுள்ள 4-ஜி சேவையை விட 10 மடங்கு வேகமாக இருக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செலவைக் குறைப்பதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏர் வேவ்களுக்கான முன்பணத்தை நீக்கியதோடு, ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனங்கள் 5-ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தொகையை 20 மாத தவணையில் செலுத்தவும் மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

5G சேவை மூலம் நவீன வணிகங்கள் உருவாக்குவதற்கும், நிறுவனங்களுக்கு கூடுதல் வருவாயை உருவாக்குவதற்கும், புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கும் சாத்தியம் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. 

மேலும் படிக்க | உத்தரபிரதேசத்தில் நீதித்துறையின் திறமை சோதிக்கப்படுகிறது: SC தலைமை நீதிபதிக்கு கடிதம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News