Budget 2023: நாட்டில் உள்கட்டமைப்புத் துறைக்கு உள்ள எதிர்பார்ப்புகள் என்ன?

Budget 2023: உள்கட்டமைப்பு துறையில் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி மற்றும் உறுதியான மேம்பாடுக்கு ஏற்றவாறு பல முன்முயற்சிகளும், சலுகைகளும், முதலீடுகளும் முன்னுரிமை பெறும் என இத்துறையை சார்ந்த வல்லுனர்கள் தங்கள் எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 1, 2023, 11:33 AM IST
  • தொழில்துறையின் எதிர்பார்ப்பு என்ன?
  • ல்வேறு தொழில்துறையினரும் பல வித எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர்.
  • சாலை உள்கட்டமைப்பில் கவனம்?
Budget 2023: நாட்டில் உள்கட்டமைப்புத் துறைக்கு உள்ள எதிர்பார்ப்புகள் என்ன?  title=

பட்ஜெட் 2023: இன்று நாட்டின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அனைத்து தரப்பினரும், சாமானியர்களும் பல வித சலுகைகளுக்காக மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர். முக்கியமாக, வரி வகைகளில் பல வித சலுகைகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. அதிகபட்ச வருமான வரி சம்பளம் பெறும் வகுப்பினரிடமிருந்தே வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் வரி வரம்பை உயர்த்தி நிதி அமைச்சர் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது தவிர, நிலையான விலக்கும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மோடி அரசாங்கத்தின் இந்த ஆட்சிக்காலத்தின் கடைசி முழு பட்ஜெட் இதுவாக இருக்கும். ஆகையால், இந்த பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளும் விண்ணைத் தொட்டுள்ளன. 

தொழில்துறையின் எதிர்பார்ப்பு என்ன?

பல்வேறு தொழில்துறையினரும் பல வித எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். ரியல் எஸ்டேட் துறையில் உள்ள வல்லுநர்கள் இந்த பட்ஜெட்டில், வாடகை வருமானத்தின் மீதான  வரி வகைகளில் வரி விலக்கு முதல் ஹோம் லோனில் பிரின்சிபல் அமவுண்ட் கழித்தல், ஆடம்பரப் பிரிவுக்கான ஊக்கத்தொகை, 80IBA பதிவு காலக்கெடுவை புதுப்பித்தல் போன்றவற்றில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கின்றனர்.  

சாலை உள்கட்டமைப்பில் கவனம்?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை மத்திய பட்ஜெட் 2023 ஐ தாக்கல் செய்துகொண்டிருக்கும் இந்த நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான அம்சங்கள் இதில் அதிகமாக காணப்படும் என்ற நம்பிக்கைகள் அதிகம் உள்ளன. நடுத்தர வர்க்கம் மற்றும் சம்பளம் பெறும் தொழில் வல்லுநர்கள் வரி நிவாரணத்தை எதிர்பார்க்கிறார்கள். 

மேலும் படிக்க | பட்ஜெட்டில் அதிக வார்த்தைகள் பேசியது யார் தெரியுமா...? - சுவாரஸ்ய தகவல்கள் 

முக்கிய துறையான், உள்கட்டமைப்பு மற்ற பெரிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில், நாட்டின் வளர்ச்சி விகிதத்தை நிலைநிறுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்தியாவின் லட்சியத்தை அடைவதிலும் அதிக நம்பிக்கை தரும் துறையாக உள்ளது. பெரிய உள்கட்டமைப்பு முதலீடுகள் ரியல் எஸ்டேட் முதல் ஆட்டோ வரையிலான துறைகளில் வேலைகள் மற்றும் வளர்ச்சியை உருவாக்க உதவும். 

2023-24 நிதியாண்டிற்கான தனது ஐந்தாவது பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் சமர்ப்பிக்கும் நிலையில், உள்கட்டமைப்பு பணிகளில், இந்த பட்ஜெட்டில் அதிக சலுகைகளும் அறிவிப்புகளும் இருக்கும் என எதிர்பார்கப்படுகின்றது. 

உள்கட்டமைப்பு துறையில் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி மற்றும் உறுதியான மேம்பாடுக்கு ஏற்றவாறு பல முன்முயற்சிகளும், சலுகைகளும், முதலீடுகளும் முன்னுரிமை பெறும் என இத்துறையை சார்ந்த வல்லுனர்கள் தங்கள் எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | Budget Expectations 2023: பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள், சாமானிய மக்களுக்கு ஜாக்பாட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News