Budget 2021: Feb 1 அன்று MP-களுக்கு 5 ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு: மெனு, விலை விவரம் உள்ளே

பிப்ரவரி 1 ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது, இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணவு பரிமாறும். ஐந்து நட்சத்திர அசோகா ஹோட்டலின் சமையல்கலை வல்லுநர்களால் இந்த உணவு சமைக்கப்படும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 29, 2021, 03:34 PM IST
  • இந்த பட்ஜெட்டில் நீண்ட காலமாக இருந்த ஒரு வழக்கம் மாற்றப்படவுள்ளது.
  • சுமார் 52 ஆண்டுகாலமாக நாடாளுமன்றத்தில் வடக்கு ரயில்வே உணவு வழங்கி வருகிறது.
  • வடக்கு ரயில்வே கேண்டீனின் பொறுப்பை 2020 நவம்பர் 15 அன்று ITDC-க்கு ஒப்படைத்தது.
Budget 2021: Feb 1 அன்று MP-களுக்கு 5 ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு: மெனு, விலை விவரம் உள்ளே title=

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நீண்ட காலமாக இருந்த ஒரு வழக்கமும் அன்று மாற்றப்படவுள்ளது. வழக்கமாக இந்த நாளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு வடக்கு ரயில்வேயால் வழங்கப்படுகிறது. சுமார் 52 ஆண்டுகாலமாக இருக்கும் இந்த வழக்கம் இந்த ஆண்டு மாற்றப்படும்.

பிப்ரவரி 1 ம் தேதி மத்திய பட்ஜெட் (Union Budget) தாக்கல் செய்யப்படும் போது, இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணவு பரிமாறும். ஐ.ஏ.என்.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஐந்து நட்சத்திர அசோகா ஹோட்டலின் சமையல்கலை வல்லுநர்களால் இந்த உணவு சமைக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் (Parliament) பட்ஜெட் அன்று வழங்கப்படும் உணவு மானிய விலையில் இருக்கும். அசோகா ஹோட்டலின் வழக்கமான பயன்பாட்டு விலையில் இருக்காது. உதாரணமாக, சைவ சாப்பாட்டுக்கான விலை 100 ரூபாயாக இருக்கும். அதில், கடாய் பன்னீர், மிக்ஸ் வெஜ் ட்ரை, பாஜி, தால் சுல்தானி, பட்டாணி புலாவ், சப்பாத்தி, பச்சை சாலட், வெள்ளரி புதினா ராய்தா, அப்பளம் மற்றும் காலா ஜமுன் ஆகியவை இருக்கும்.

ALSO READ: நாடாளுமன்றத்தில் இனி கேண்டீன் உணவிற்கு மானியம் இல்லை.. விலைப் பட்டியல் இதோ..!!!

மிக்ஸ் வெஜ் ட்ரை, பாஜி, தால் சுல்தானி, ஜீரா புலாவ், சப்பாத்தி, கிரீன் சாலட், வெள்ளரி புதினா ராய்தா மற்றும் அப்பளம் ஆகிய உணவு வகைகளுடனான ஒரு மினி சாப்பாடும் கிடைக்கும். இதன் விலை 50 ரூபாயாக இருக்கும்.

இது தவிர, 13 உணவு வகைகளுடன் கூடிய ஒரு 'ஏ லா கார்டே' மெனுவும் இடம்பெறும். அதில் சிற்றுண்டி மற்றும் சைவ மற்றும் மினி தாலி ஆகியவற்றுடன் கூடிய ஏழு வகையான உணவுகள் இருக்கும்.

ஸ்னாக்ஸ் வகைகளில், ரூ .25 க்கு உப்மா, ரூ .50 க்கு பன்னீர் பக்கோடா, 10 ரூபாய்க்கு சமோசா ஆகியவை இருக்கும்.

1968 முதல் நாடாளுமன்றத்தில் உணவு பரிமாறிக் கொண்டிருந்த வடக்கு ரயில்வே, கேண்டீனின் பொறுப்பை 2020 நவம்பர் 15 அன்று ITDC-க்கு ஒப்படைத்தது.

ALSO READ: Budget 2021: 1950 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வருமான வரி எவ்வளவு தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News