Awadh Bihari Choudhary In Bihar: பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் அவத் பிஹாரி சவுத்ரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இறுதியாக அவாத் பிகாரி சவுத்ரியை நீக்கும் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. அவருக்கு எதிரான தீர்மானத்திற்கு125 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 112 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதையடுத்து சபாநாயகர் நீக்கம் செய்யப்பட்டார். இவர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இன்று பீகார் சட்டசபையில் நிதீஷ் குமார் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க உள்ள நிலையில், பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் அவத் பிஹாரி சவுத்ரி நீக்கப்பட்டு உள்ளார்.
சபாநாயகர் பதவியை இழந்த அவத் பிஹாரி சவுத்ரி
இதையடுத்து சபாநாயகர் சவுத்ரி தலைவர் பதவியில் இருந்து விலகினார். அப்பொழுது பேசிய அவர், அனைத்து உறுப்பினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட அவர், தான் இப்பதவியை வகித்த வரையில் எவ்வித பாகுபாடும் இன்றி விதிகளுக்கு உட்பட்டு சபையை நடத்தியதாகத் தெரிவித்தார்.
துணை சபாநாயகர் சபைக்கு தலைமை தாங்கினார்
சபாநாயகர் அவாத் பிஹாரி சவுத்ரியை பதவியில் இருந்து நீக்குவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பின் போது, சபாநாயகருக்கு எதிராக போதுமான வாக்குகள் கிடைத்ததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாகவே சபாநாயகர் பதவியில் இருந்து அவத் பிஹாரி சவுத்ரி விலகினார். துணை சபாநாயகர் மகேஷ்வர் ஹசாரி சபை நடவடிக்கைகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகரை நீக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மேலும் படிக்க - Bihar: நிதிஷ்குமார் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுமா?
பாஜக - ஜேடியு கூட்டணி பலத்தை வெளிப்படுத்தியது
முதலில் குரல் வாக்கெடுப்பு மூலமாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு. அதன் பிறகு சட்டப்பேரவை சபாநாயகர் அவத் பிஹாரி சவுத்ரிக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்திற்கு வாக்களிக்கும் பணி தொடங்கியது. இரு தரப்பிலும் வாக்குகள் பதிவாகின. இதில் சபாநாயகரை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 112 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதையடுத்து, சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து அவத் பிஹாரி சவுத்ரி நீக்கப்பட்டார். சபாநாயகர் பதவியில் இருந்து அவத் பிஹாரி சௌத்ரியை நீக்குவதற்கான செயல்முறை நிறைவடைந்தது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே நிதிஷ் கூட்டை முதல் தடையைத் தாண்டியது.
பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் -அவத் பிஹாரி சவுத்ரி
அவத் பிஹாரி சவுத்ரி கூறுகையில், தனக்கு ஒரு வாய்ப்பு அளித்ததற்கு முந்தைய மகா கூட்டணி அரசுக்கு நன்றி தெரிவித்தார். அவரை பதவியில் இருந்து நீக்கும் முயற்சியை என்டிஏ தொடங்கியபோது, பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று அவத் பிஹாரி சவுத்ரி கூறினார். அதன் பிறகு சபாநாயகர் அவத் பிஹாரி சவுத்ரிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - பீகார் அரசியல்: நிதிஷ் குமார்-ஆ அல்லது தேஜஸ்வி-ஆ.. ஓவைசி யார் பக்கம்..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ