ஞானவாபி மசூதி: இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதி... நீதிமன்ற உத்தரவின் முழு விவரம்!

Gyanvapi Mosque Issue Latest Update: ஞானவாபி பள்ளிவாசலில் இந்துக்கள் வழிபட அனுமதி அளித்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. வழிபாடு நடத்துவற்காக பூசாரியை நியமிக்க காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளைக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

Written by - Sudharsan G | Last Updated : Jan 31, 2024, 05:25 PM IST
  • ஞானவாபி மசூதி, இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டது என கூறப்படுகிறது.
  • அங்கு தொல்லியல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
  • ஆய்வு குறித்து 800 பக்க அறிக்கையும் தயார் செய்யப்பட்டுள்ளது.
ஞானவாபி மசூதி: இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதி... நீதிமன்ற உத்தரவின் முழு விவரம்! title=

Gyanvapi Mosque Issue Latest Update: ஞானவாபி பள்ளிவாசலில் இந்துக்கள் வழிபட அனுமதி அளித்து வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. வழிபாடு நடத்துவற்காக பூசாரியை நியமிக்க காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது, ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள 'வியாஸ் கா தெஹ்கானா'வில் இந்து தரப்பு பிரார்த்தனை செய்ய வாரணாசி மாவட்ட நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கி தீரப்பு வழங்கியுள்ளது. 

தீர்ப்பில் குறிப்பிட்டது என்ன?

இதுகுறித்து, இந்துக்கள் தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறுகையில், "மாவட்ட நிர்வாகம் 7 நாட்களுக்குள் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஏழு நாட்களுக்குள் பூஜை தொடங்கும். அனைவருக்கும் பூஜை செய்ய உரிமை உண்டு" என்றார். இருப்பினும் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருப்பதாகவும் இஸ்லாமியர்களின் தரப்பு தெரிவித்துள்ளது..

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி பள்ளிவாசல் கடந்த சில ஆண்டுகளாக பேசுபொருளாக இருந்து வருகிறது. அந்த பள்ளிவாசல் முன் ஒரு காலத்தில் இந்துக்கள் வழிபடும் கோயிலாக இருந்ததாக கூறப்பட்டு, அதன்பேரில் வழக்கு தொடுக்கப்பட்டது. குறிப்பாக, அந்த பள்ளிவாசலின் கீழ் தளத்தில் இருந்து சிவலிங்கம் (இன்னும் உறுதிசெய்யப்படவில்லை) போன்ற ஒன்று கண்டெடுக்கப்பட்டது இந்த வழக்கை இன்னும் தீவிரமாகியது எனலாம்.

மேலும் படிக்க | ராகுல் காந்தியின் கார் தாக்கப்பட்டதா? விளக்கம் அளித்த காங்கிரஸ்

இந்து கோவில் இருந்ததா?

அந்த வகையில், கடந்த மாதம் இந்த வழக்கின் மீது அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதாவது, அந்த இடத்தில் உள்ள கோவிலை மீட்டெடுக்கக் கோரிய சிவில் வழக்குகளை எதிர்த்து மசூதி குழுவின் அனைத்து மனுக்களையும் நிராகரித்தது. முன்னதாக, ஞானவாபி மசூதி வளாகத்தை இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை (ASI) கடந்தாண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் ஆய்வு செய்ய தொடங்கியது.

இந்த ஆய்வு குறித்து ASI 800 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்பித்தது. மேலும், இந்துக்கள் சார்பில் வாதாடும் விஷ்ணு சங்கர் ஜெயின், ASI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்து பொதுவெளியில் அறிவித்தார். அதாவது, அந்த அறிக்கையில், 17ஆம் நூற்றாண்டில் இந்து கோவிலை இடித்து தற்போதுள்ள ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்ட மசூதி வளாகத்தில் ருத்ரா, ஜனார்தன் மற்றும் விஸ்வேஷ்வருடன் தொடர்புடைய கன்னடம், தேவநாகரி, தெலுங்கு மொழிகளில் உள்ள பழங்கால எழுத்துருக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். இடிக்கப்பட்ட கோவிலின் தூண்கள், தற்போதுள்ள மசூதியை கட்ட பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வசுகானா பகுதியில் ஆய்வு

தொழுகைக்கு முன் முஸ்லீம்கள் கழுவும் இடமான 'வசுகானா' என்ற இடத்தில்தான் சிவலிங்கம் போன்ற ஒன்று கண்டெடுக்கப்பட்டது. தற்போது அந்த இடத்திற்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு தொல்லியல் துறை ஆய்வு நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. அதை தவிர்த்து பிற பகுதிகளில்தான் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், வசுகானா என்ற அந்த பகுதியில் போடப்பட்ட சீல்களை அகற்றி, அங்கு இருப்பதாக கூறப்படும் சிவலிங்கத்திற்கு சேதாரம் வராத வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இந்துக்கள் தரப்பு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க |  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் திரௌபதி முர்மு ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News