Amit Shah: 450 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர் தர ரெடி! மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி

Cylinder price Rs 450: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமையல் சிலிண்டரை ₹450க்கு வழங்குவோம் என இந்தூரில் பாஜக தேர்தல் பரப்புரையில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா வாக்குறுதி

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 12, 2023, 05:14 PM IST
  • கேஸ் சிலிண்டர் குறித்த முக்கிய செய்தி
  • மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு
  • தேர்தல் பிரசாரத்தில் மத்திய அமைச்சர்
Amit Shah: 450 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர் தர ரெடி! மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி title=

Lowest LPG Cylinder Price:  மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமையல் சிலிண்டரை ₹450க்கு வழங்குவோம் என இந்தூரில் பாஜக தேர்தல் பரப்புரையில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா வாக்குறுதி அளித்துள்ளார். 

நாடு முழுவதும் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு காஸ் சிலிண்டர் விலையை குறைத்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டரில் ரூ. 200 விலை குறைப்பு தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து, நாடு முழுவதும் சுமார் 10.35 கோடி பேருக்கு ரூ. 400 தள்ளுபடி கிடைத்தது. 

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை ரூ.450க்கு வழங்க மத்தியப் பிரதேச மாநில அரசு உத்தரவிட்டது. அதனை அடுத்து, முக்கிய மந்திரி லட்லி பேஹ்னா யோஜனா பயனாளிகளுக்கும் 450 ரூபாய் என்ற விலையில் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ரிசர்வ் வங்கி அளித்த தீபாவளி பரிசு: செய்தி கேட்டு குஷியான நகை வியாபாரிகள்

பணவீக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைத்தது. இப்போது வெறும் 450 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் (Gas Cylinder) பெற வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், தேர்தல் பரப்புரையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடுத்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், அதற்கு அரசு கஜானாவுக்கு நிறைய செலவாகும்.

Amit Shah

மத்தியப் பிரதேசத்தில் எல்பிஜி இணைப்பு

தற்போது 450 ரூபாய்க்கு சமையல்  எரிவாயு சிலிண்டர் பெறுபவர்கள், தங்கள் எல்பிஜி இணைப்பு எண், எல்பிஜி இணைப்பு ஐடி, முக்கிய மந்திரி லட்லி பேஹ்னா யோஜனா பதிவு அட்டை விவரங்களை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதம மந்திரி உஜ்ஜாவ்லா யோஜனா திட்டப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விவரத்தை மாதாமாதம் மாநில உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு மாதந்தோறும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனம் தெரிவிக்கிறது.

இதன் அடிப்படையில் திட்டப் பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அந்த மானியத் தொகை பயனாளிகளின் ஆதார் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குக்கு எண்ணெய் நிறுவனங்கள் அனுப்பி வைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா அல்லாத கேட்டரிகிரியை சேர்ந்தவர்களின் லட்லி பேஹ்னா பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை, எண்ணெய் நிறுவனத்துக்கு மத்தியப் பிரதேச மாநில அரசு தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Indian Railways: ரயில் பயணிகளே... ‘இந்த’ அளவுக்கு அதிமாக சாமான் கொண்டு போனால் கூடுதல் கட்டணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News