ADMK செயற்குழுவில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 15 தீர்மானங்கள் அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது!!

Last Updated : Sep 28, 2020, 11:51 AM IST
ADMK செயற்குழுவில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்!! title=

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 15 தீர்மானங்கள் அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது!!

சென்னையில் நடந்தது வரும் அதிமுக (ADMK) செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் அயராது உழைத்த OPS-EPS மற்றும் அமைச்சர்களுக்கு செயற்குழுவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று  அரசு குறைத்திருப்பதை ஏற்று மத்திய அரசு நிதி ஒதுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

அடுத்த ஆண்டு மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் ஆளும் கட்சியான அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை அவைத் தலைவர் மதுசூதனன் முன்மொழிய, செயற்குழு உறுப்பினர்கள் வழிமொழிந்தனர்.

ALSO READ | மறவாதீர்கள்.. ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி நாள் செப்.30..!!!

நாட்டிற்கே முன்னோடியாகவும், அனைவருக்கும் எடுத்துக்காட்டாகவும் கொரோனா தடுப்பு பணிகளையும், மருத்துவப் பணிகளையும், மறுவாழ்வு பணிகளையும், சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளின் சிறப்புடன் செய்து வந்த தமிழ்நாடு அரசுக்கும், அரசு ஊழியர்களுக்கும், தன்னார்வத் தொண்டர்களும் நன்றியும் பாராட்டும் தெரிவிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே போல பத்திரிகை மற்றும் ஊடக பணியாளர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்ததாகவும் அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அதிமுக அரசு மேற்கொண்டிருக்கும் சிறப்பான கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நோய் தொற்றிலிருந்தும், பொருளாதார சரிவிலிருந்தும் மக்கள் பாதுகாக்கப்பட்டு இருப்பதை ஏற்று மத்திய அரசை கொரோனா நிவாரணத்திற்கு தடுப்பிற்கு போதுமான நிதி ஆதாரத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதே போல ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், நீட் தேர்வில் விலக்கு, இருமொழிகொளகை என 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Trending News