'வீர் சக்ரா' விருது பெற்றார் IAF குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமான்

பாகிஸ்தான் பிடியில் சிக்கிய பின்னரும் அவர் மிகுந்த தெளிவுடனும், செயல்கூர்மையுடன் நடந்துகொண்டார்.  பாகிஸ்தானின் பிடியில் இருந்து அவர் பாதுகாப்புக்காக மீண்டு வருவதற்காக இந்தியாவே காத்திருந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 22, 2021, 12:31 PM IST
'வீர் சக்ரா' விருது பெற்றார் IAF குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமான்  title=

Vir Chakra for Abhinandan Varthaman: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அபிநந்தன் வர்தமானுக்கு வீர் சக்ரா விருதை அளித்து கவுரவித்தார். பாலாகோட் வான்வழித் தாக்குதலில் ஒப்பற்ற வகையில் வீர தீர பராக்கிரமத்தை காண்பித்த அபிநந்தன் வர்தமானை எந்த இந்தியராலும் மறக்க முடியாது.

பிப்ரவரி 27, 2019 அன்று நடந்த வான்வழிப் போரில், அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தானின் (Pakistan) F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார். இதற்கிடையில் பாகிஸ்தான் படைகளிடம் சிக்கிய அவர், மூன்று நாட்கள் பாகிஸ்தானின் வசம் இருந்தார்.

முன்னதாக, இந்திய விமானப்படை அவருக்கு குரூப் கேப்டனாக பதவி உயர்வு அளித்துள்ளது. இந்த பதவி இந்திய ராணுவத்தில் கர்னல் பதவிக்கு சமமானது. பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தனுக்கு சௌரிய சக்ரா விருது வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

புல்வாமா (Pulwama) தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன் பிறகு அதிகரித்த பதற்றம் காரணமாக பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றன. பாகிஸ்தானின் இந்த அடாவடித்தனத்திற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.

ALSO READ:பள்ளி பாடபுத்தகத்தில் அபிநந்தன்: ராஜஸ்தான் அரசு 

பாகிஸ்தானின் எஃப்-16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் (Abinandan Varthaman), இந்திய எல்லைக்குள் நிழைய முயன்ற பாகிஸ்தானின் F-16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார். ஆனால் இதில் அவரது விமானமும் சேதமடைந்தது. பாகிஸ்தான் விமானத்தை தாக்கி வீழ்த்த செய்த முயற்சியில் அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்துவிட்டார்.

இதையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அவரை கைது செய்தனர். பின்னர், இந்தியா தரப்பில் கொடுக்கப்பட்ட் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் அவரை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைத்தது.

கீழே விழுந்த விங் கமாண்டருக்கு தான் எங்கே இருக்கிறோம் என்று தெரியவில்லை. எனினும், தான் பாகிஸ்தானில் இருப்பதை உணர்ந்தவுடன், தன்னிடம் இருந்த ஆவணங்களை குளத்தில் வீசினார். மீதமுள்ள ஆவணங்கள் மென்று விழுங்கப்பட்டன. நாட்டைப் பற்றிய முக்கியமான தகவல்கள் எதிரிகளிடம் போய்விடக் கூடாது என்பதற்காக அவர் இப்படிப்பட்ட புத்திசாலித்தனமான செயல்களை மிகவும் துரிதமாக செய்து முடித்தார்.

பாகிஸ்தான் பிடியில் சிக்கிய பின்னரும் அவர் மிகுந்த தெளிவுடனும், செயல்கூர்மையுடன் நடந்துகொண்டார்.  பாகிஸ்தானின் பிடியில் இருந்து அவர் பாதுகாப்புக்காக மீண்டு வருவதற்காக இந்தியாவே காத்திருந்தது.

ALSO READ:Watch: IAF விமானி அபிநந்தன் பிடிபட்டதை கிண்டல் செய்து பாக்., விளம்பரம்..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News