வதோதரா : மக்களை கவரும் பொருட்டு பலரும் பலவிதமான வியாபார யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அது மக்களையும் கவர்வதோடு,தொழிலையும் பெருக்க உதவுகிறது. அதனடிப்படையில் தான் இங்கு ஒருவர் வித்தியாசமாக தனது ஹோட்டலை உருமாற்றியுள்ளார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
குஜராத் மாநிலத்தில் வதோதரா என்ற இடத்தில் விமானம் ஒன்றை ஹோட்டலாக மாற்றி ஒருவர் வடிவமைத்துள்ளனர். இதற்கென்றே பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து ஏர்பஸ்-320 ரக விமானம் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த வித்தியாசமான ஹோட்டல் குறித்து அந்த ஹோட்டல் நிர்வாக இயக்குநர் முகி பதிலளித்துள்ளார்,அதாவது “வாடிக்கையாளர்கள் இந்த உணவகத்துக்குள் வரும் போது, நிஜ விமானத்திற்குள் வருவது போன்ற ஒருவித உணர்வு ஏற்படும். மேலும் எங்கள் உணவகத்தில் பஞ்சாபி, சைனீஸ், இத்தாலியன், மெக்சிகன், தாய், காண்டினெண்டல் போன்ற பல்வேறு வகையான வெளிநாடு,உள்நாடு உணவு வகைகள் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
இந்த உணவகத்திற்கு உணவருந்த வரும் வாடிக்கையாளர்களுக்கு விமானத்தில் பயணிக்க எப்படி டிக்கெட் வழங்கப்படுகிறதோ அதேபோல இவர்களுக்கும் டிக்கெட் கொடுக்கப்படுகிறது. இது அனைவருக்கும் வித்தியாசமான அனுபவத்தை தருகிறது. மேலும் இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 106 நபர்கள் உட்கார்ந்து உணவருந்தும் வகையில் இடவசதி செய்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு விமானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உடைகள் போல் உடைகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்த உடையை அணிந்தே உணவினை பரிமாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விமானத்தில் பயணிக்க முடியாமல் ஏங்கும் பலரும்,இந்த உணவகத்திற்கு சென்று தங்களது ஏக்கத்தையும் போக்கி கொள்ளலாம்.
ALSO READ AIR India நிலுவைத் தொகை தொடர்பாக நிதி அமைச்சகம் அதிரடி அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR