கேரள இளைஞரின் 782 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது!

கேரளாவின் திருவனந்தபுரம் பாறசாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ்ஜித்!

Last Updated : Jan 31, 2018, 08:09 PM IST
கேரள இளைஞரின் 782 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது! title=

கேரளாவின் திருவனந்தபுரம் பாறசாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ்ஜித்!

இவரது தம்பி ஸ்ரீஜீவ் கடந்த 2014-ம் ஆண்டு, திருட்டு வழக்கு ஒன்றில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் இருந்தபோது பலியானார். 

அவர் விஷம் குடித்து அவர் தற்கொலை செய்துகொண்டதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால், ஸ்ரீஜித் காவல்துறையினர் தான், தனது தம்பியைக் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டினார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தார்.

ஸ்ரீஜீவின் மரணம் தொடர்பாக CBI விசாரணை நடத்த வேண்டுமென்று கோரி, கேரள சட்டசபை முன்பு ஸ்ரீஜித் கடந்த 2015-ம் ஆண்டு போராட்டத்தைத் தொடங்கினார். 

இதனையடுத்து 2016-ம் ஆண்டு, இவ்வழக்கு குறித்த விசாரணையை சிறப்புப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்க கேரள அரசு ஆணை பிறப்பித்தது. ஸ்ரீஜித் மற்றும் அவருடைய தாயார் ரமணி ஆகியோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது. 

எனினும், CBI விசாரணை வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டத்தைத் ஸ்ரீஜித் தொடர்ந்தார். 2 ஆண்டுகளைக் கடந்தும் போராட்டம் நடைப்பெற்று வந்தது. 

இதையடுத்து அவருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியது. கோரள திரையுலக பிரபலங்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இதன்பின்னர் CBI விசாரணைக்குப் கேரள உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது. முதலில் மறுப்பு தெரிவித்த CBI பின்னர் விசாரணையைத் தொடங்கியது. 

இதையடுத்து, 782 நாள்கள் தொடர்ந்த போராட்டத்தினை ஸ்ரீஜித் முடித்துக் கொண்டுள்ளார்!

Trending News