2023ல் உலகை அச்சுறுத்திய 4 நோய்த்தொற்றுகள்! 2024 ஆம் ஆண்டிலும் கவனம் தேவை

Infections & Diseases Of 2023: இந்த ஆண்டில் வேகமாகப் பரவிய தொற்று நோய்களைப் பற்றியும், 2024-ல் அவை பரவும் அபாயம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 12, 2023, 05:53 PM IST
  • 2023இல் ஆண்டில் வேகமாகப் பரவிய தொற்று நோய்கள்
  • 2024ல் எந்த தொற்று நோய்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
  • நோய்கள் பரவும் அபாயம் எவ்வளவு?
2023ல் உலகை அச்சுறுத்திய 4 நோய்த்தொற்றுகள்! 2024 ஆம் ஆண்டிலும் கவனம் தேவை title=

தொற்று நோய்கள்: 2023-ல் வேகமாகப் பரவிய தொற்று நோய்களைப் பற்றியும், 2024-ல் அவை பரவும் அபாயம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். புத்தாண்டுத் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலயில், கொண்ட்டாட்டங்கள் தொடங்கும் இந்த நேரத்தில், புத்தாண்டு தொடர்பாக எடுத்த தீர்மானங்களைப் பற்றி அனைவரும் நினைவுபடுத்திப் பார்க்கும் நேரம் இது.

தீர்மானம் எடுத்தவர்களில் சிலர் வெற்றி பெற்றிருக்கலாம், சிலர் அதை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கலாம். ஆனால் புத்தாண்டு வருவதற்கு முன்பும், வந்த சில நாட்களும் அந்த ஆண்டில் செய்ய வேண்டிய இலக்கு என்ற ஒன்று அடிக்கடி பேசும் விஷயமாகிவிடுகிறது.

புதிதாய் பிறக்கும் ஆண்டு நிம்மதியாய் இருக்க வேண்டும் என்ற விருப்பம் அனைவருக்கும் இருந்தாலும், அதனூடே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற விருப்பமும் இருக்கும். இது மனிதர்களின் விருப்பமும் இலக்கும். ஆனால், இயற்கை என்ன செய்யும் என்பது யாருக்கும் தெரியாது. சென்னையில் நீண்ட காலத்திற்கு பிறகு வந்து பெரும் சேதத்தை ஏற்படுத்திய மழை, நோய் தாக்குதல் என எதிர்பாராத பிரச்சனைகளும் வரலாம்.

மேலும் படிக்க | குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்தை உறுதிபடுத்தும் வைட்டமின் பி12 நிறைந்த பழங்கள்!

அந்த வகையில் கடந்த ஆண்டில் எந்தெந்த நோய்கள் இருந்தன, அவற்றில் எவை மக்களை மிகவும் நோய்வாய்ப்படுத்தியது என்பதையும் தெரிந்துக் கொள்வோம். 2023 ஆம் ஆண்டில் அதிகம் பரவிய சில தொற்று நோய்களில் முக்கியமானவை இவை.  

MERS தொற்று (MERS infection)
இது ஒரு வகை வைரஸ் தொற்று மற்றும் இதுவும் ஒரு வகை கொரோனா வைரஸ் என்பது மிகச் சிலருக்குத் தெரியும். இந்த நோய்த்தொற்றின் பெயர் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (Middle East Respiratory Syndrome).  இது கோவிட் நோயை விட மிகவும் ஆபத்தான தொற்று. இந்த நோய் திடீரென 2023ம் ஆண்டிலும் ஒரு முறை அதிகரித்தது. இது ஒரு வைரஸ் தொற்று, எனவே 2024ஆம் ஆண்டிலும் இந்த நோய்த்தொற்று பரவாமல் தடுக்க மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கோவிட் தொற்று
கோவிட் 19 இன் வழக்குகள் 2020, 21 மற்றும் 22 இல் மட்டுமல்ல, 2023 ஆம் ஆண்டிலும் காணப்பட்டன. 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் கோவிட் 19 பாதிப்புகள் காணப்பட்டன. தற்போது கூட கோவிட் பாதிப்பு முடிவுக்கு வரவில்லை. புதுச்சேரியில் 9 பேருக்கு கோவிட் நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 2024 புத்தாண்டிலும் மக்கள் கோவிட் நோய்க்கு தயாராக இருக்க வேண்டும் என்பதால் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க | தினமும் கிராம்பு டீ குடிங்க... இதுல இருக்கு ஏகப்பட்ட நன்மைகள்

தக்காளி காய்ச்சல் (Tomato fever)

2023 ஆம் ஆண்டில், குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் ஏற்பட்டது. சுகாதாரத் துறையின் தொடர் கண்காணிப்பு தேவைப்படும் அளவு தீவிரமான தக்காளி காய்ச்சல், 2023 ஆம் ஆண்டு மட்டுமல்ல, 2024 ஆம் ஆண்டிலும் தனது கோரப் பிடியை நீட்டலாம். இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு தொற்றக்கூடியதாக இருப்பதால், இதைத் தடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கான்ஜுன்க்டிவிடிஸ் (Conjunctivitis)
இந்த ஆண்டு சில மாதங்களுக்கு முன்பு, கான்ஜுன்க்டிவிடிஸ் திடீரென அதிகமானது. இந்த நோய் கான்ஜுன்க்டிவிடிஸ், பிங்க் கண் அல்லது கண் நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு வகை தொற்று ஆகும், இது கண் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளான கண்ணிமையின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளை பாதிக்கலாம். இந்த நோயின் பாதிப்பை கருத்தில் கொண்டு புத்தாண்டிலும் கவனமாக இருப்பது அவசியம் ஆகும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்ட இந்தக் கட்டுரை, வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியுடன் எழுதப்பட்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நோய்களை அஞ்சி ஓட வைக்கும் இஞ்சி: பல வித நன்மைகளின் புதையல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News