COVID தடுப்பூசி பின்விளைவுகளுக்கான மருத்துவ செலவுகள் உங்கள் சுகாதார பாலிசியில் கவர் செய்யப்படுமா?

தடுப்பூசி செயல்முறை அரசாங்கத்தால் முழு முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், முதியோருக்கும் நாள்பட்ட நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தற்போது தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 19, 2021, 04:17 PM IST
  • கோவிட் -19 தடுப்பூசி பக்கவிளைவுகளுக்கு காப்பீட்டு உதவி கிடைக்குமா?
  • தடுப்பூசியால் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடுமோ என ஒரு பிரிவினர் பதட்டத்தில் உள்ளனர்.
  • இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) தெளிவான தகவலை வழங்கியுள்ளது.
COVID தடுப்பூசி பின்விளைவுகளுக்கான மருத்துவ செலவுகள் உங்கள் சுகாதார பாலிசியில் கவர் செய்யப்படுமா? title=

கோவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொண்டதன் விளைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்படியான பக்க விளைவுகள் உங்களுக்கு ஏற்பட்டால், உங்கள் காப்பீட்டுக் கொள்கை அதில் உங்களுக்கு உதவுமா? இது குறித்து இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) தெளிவான தகவலை வழங்கியுள்ளது. 

தடுப்பூசி செயல்முறை அரசாங்கத்தால் முழு முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், முதியோருக்கும் நாள்பட்ட நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தற்போது தடுப்பூசி கொடுக்கப்பட்டு வருகிறது. எனினும், இந்த தடுப்பூசியால் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடுமோ என ஒரு பிரிவினர் பதட்டத்தில் உள்ளனர். 

அப்படி பக்க விளைவுகள் ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டால், அந்த செலவை காப்பீட்டு நிறுவனங்கள் ஈடு செய்யுமா என பலர் காப்பீட்டு நிறுவனங்களை கேட்டு வருவதாக பல ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கோவிட் -19 தடுப்பூசியால் எற்படும் பாதகமான எதிர்வினைகளுக்காக மருத்துவமனையில் பெறப்படும் சிகிச்சையின் செலவுகள் சுகாதார காப்பீட்டுக் கொள்கைகளின் கீழ் வருமா என்று மக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

"கோவிட் -19 தடுப்பூசிக்கு எதிர்மறையான எதிர்விளைவை எதிர்கொண்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், பாலிசியின் குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு சுகாதார காப்பீட்டுக் கொள்கைகளின் கீழ் இந்த செலவு கவர் செய்யப்படும்” என்று IRDAI செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை அளிக்கப்பட்ட உடல்நலக் குறைபாடுகளின் பட்டியல் இதோ: 

நீரிழிவு நோய், இதய செயலிழப்பு, இருதய மாற்று அறுவை சிகிச்சை, மிதமான அல்லது கடுமையான வால்வுலர் இதய நோய், ஹீமோடையாலிசிஸில் இறுதி கட்ட சிறுநீரக நோய்,  கடுமையான சுவாச நோய்,  முதன்மை நோயெதிர்ப்பு குறைபாடு நோய்கள் / எச்.ஐ.வி தொற்று மற்றும் ஆஞ்சினா மற்றும் உயர் இரத்த அழுத்தம் / சிகிச்சையில்.இருக்கும் நீரிழிவு நோய் ஆகியவை முன்னுரிமையளிக்கப்பட்ட இணை நோய்கள் ஆகும். 

கோவிட் 19 தடுப்பூசிக்கு பதிவு செய்வது எப்படி:

தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்பவர்கள் மருத்துவரின் பரிந்துரை சீட்டை உடன் வைத்திருக்க வெண்டும். Co-WIN 2.0-வில் பதிவு செய்யும் போது இதை பதிவேற்றம் செய்யலாம். அல்லது இதை தங்களுடன் எடுத்துச் செல்லலாம். 
1) அட்வான்ஸ் சுய பதிவு: CO-Win 2.0 போர்ட்டலைப் பதிவிறக்குவதன் மூலமும், ஆரோக்ய சேது போன்ற பிற தகவல் தொழில்நுட்ப செயலிகள் மூலமாகவும் பயனாளிகள் முன்கூட்டியே சுய பதிவு செய்யலாம்.

2) ஆன்-சைட் பதிவு: மக்கள், அடையாளம் காணப்பட்ட COVID தடுப்பூசி மையங்களுக்கு சென்று, அப்போதே பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். 

3) கோஹார்ட் பதிவு: இதன் கீழ், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் இது தொடர்பாக முனைப்புடன் செயல்படும். தடுப்பூசிக்கான குறிப்பிட்ட தேதிகளை இது தீர்மானிக்கும். அங்கு பயனாளிகளுக்கு குழுக்களில் தடுப்பூசி போடப்படும்.

Trending News