சென்னை ராயப்பேட்டையில், ஸ்ரீவாரு மோட்டார்ஸ் லிமிடெட் - இன் புதிய கிளை தொடக்க விழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதல் பெண் தேசிய மோட்டார் பந்தய விராங்கனை அலிஷா அப்துல்லா கலந்து கொண்டார். அவருடன் ஸ்ரீவாரு மோட்டார்ஸின் தலைமை விற்பனை அதிகாரி அஷ்வின் குமார், விற்பனை மற்றும் டீலர் மேம்பாட்டு துணைத் தலைவர் ரோஹித் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஶ்ரீவாரு மோட்டார்சின் இந்த எஸ். வி. எம். அனுபவ மையம், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் இணையற்ற வாடிக்கையாளர் சேவை அனுபவத்தை இணைக்கும் தொலைநோக்குப் பார்வையை உள்ளடக்கியது.
இந்நிறுவனத்தால் சமீபத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட PRANA 2.0, EV மின்சார மோட்டார் உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இந்த திறப்பு விழாவின்போது, 20 வாடிக்கையாளர்களுக்கு புதிய மின்சார வாகனங்கள் வழங்கப்பட்டன.
இது குறித்து ஸ்ரீவாரு மோட்டார்ஸின் தலைமை விற்பனை அதிகாரி அஸ்வின் குமார், நிகழ்ச்சியில் உரையாற்றும்போது, புதுமையை வரவேற்பதில் முன்னணியில் இருக்கும் சென்னையின் மையப்பகுதியில் முதன்மை ஷோரூமை திறப்பது ஸ்ரீவாரு மோட்டார்ஸ் நிறுவனத்தின் வெற்றிப் பாதையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் தலைசிறந்த அனுபவத்தை வழங்குவதற்கான மையமாக இது இருக்கும். தங்களுடைய சமீபத்திய கண்டுபிடிப்பான PRANA 2.0, எலக்ட்ரிக் பைக் பல்வேறு மேம்பட்ட அம்சங்கள் மூலம், மின்சார வாகன சந்தையில் புதிய பரிமாணத்தை உருவாக்கி உள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய விற்பனை மற்றும் டீலர் மேம்பாட்டு துணைத் தலைவர் ரோஹித் குமார், இந்த புதிய ஷோரூம் அதிநவீன தொழில்நுட்பத்திற்கும், சேவைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவாரு மோட்டார்ஸில், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்துவமான தேவைகள் இருப்பதை புரிந்து கொண்டு, அதற்கேற்ற அனுபவத்தை வழங்குவதே தங்களது நோக்கம். சென்னயில் இது ஒரு தொடக்கம் மட்டுமே. இதனை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தும் தொலைநோக்கு பார்வையோடு செயல்படுவதாக கூறிய அவர், அடுத்த 90 நாட்களில் டீலர்ஷிப் நெட்வொர்க்கை 3 முதல் 30 இடங்களுக்கு வளர்ப்போம் என்றார்.
இது குறித்து பேசிய சிறப்பு விருந்தினர் அலிஷா அப்துல்லா, நிலையான இயக்கத்திற்கு ஸ்ரீவாரு மோட்டார்ஸின் பங்களிப்புகள் பெரியது. PRANA 2.0 போன்ற மாடல்களுடன் எலக்ட்ரிக் பைக்குகளுக்கு ஸ்ரீவாரு மோட்டார்ஸ் கொடுக்கும் முக்கியத்துவம் மகிழ்ச்சியளிக்கிறது. நிலைத்தன்மை, புதுமை மற்றும் ரைடர்களை மேம்படுத்துவதில் இந்நிறுவனத்தின் அர்ப்பணிப்பு உண்மையில் பாராட்டத்தக்கது.
இந்த ஷோரூம் போக்குவரத்தின் எதிர்காலத்தை நோக்கி பலரை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன். மதிப்புமிக்க மின்சார இயக்கத்தை எளிமையாக்கி அதிநவீன அம்சங்களை வழங்குவதில் கவனம் செலுத்துவது என்பது ஒரு தூய பசுமையான கிரகத்தை நோக்கிய பயணத்தின் முக்கிய நகர்வு என பாராட்டினார்.
மேலும் படிங்க: சைஃப் அலிகான் கத்திக்குத்து விவகாரம்: கைதானவரின் திடுக்கிடும் பின்னணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ