பாசில் ஜோசப் மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான பாராட்டப்பட்ட இயக்குநர் ஆவார். இந்திய திரைத்துறையில் சிறந்த சூப்பர் கதாநாயகன் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படும் மின்னல் முரளி இயக்குநராக அறியப்பட்டார். தற்போது சூர்யாவுடன் இணைந்து ஒரு புது படத்தினை உருவாக்கத் தயாராகிவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கங்குவா படத்திற்கு அடுத்ததாக மீண்டும் படத்தில் களம் இறங்கிய சூர்யா தற்போது தனது அடுத்த படத்திற்குத் தயாராகி வருகிறார். அதே நேரத்தில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வதுத் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது சூர்யா மலையாள நடிகர் பாசில் ஜோசப் உடன் இணைந்து படம் நடிக்க இருக்கிறார்.
சூர்யா நீண்ட நாட்களுக்குப் பிறகு படத்தில் நடிக்க வந்திருக்கிறார். சிவா கூட்டணியில் உருவான கங்குவா திரைப்படம் பலரும் விமர்சன ரீதியாகப் பாராட்டவில்லை.
கங்குவா படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவந்ததாகத் தகவல் சொல்லப்படுகிறது.
சூர்யா தனது 45 படத்தை ஆர்.ஜெ பாலாஜி இயக்கத்தில் ரெட்ரோ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
முன்னதாக சூர்யா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரும்பு கை மாயாவில் படத்தில் நடிப்பதாக இருந்தது. எதிர்பாரா விதமாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தழுவப்பட்டது.
இப்படம் சூர்யாவுக்குக் கிடைக்க மறுத்தாலும் மறுபுறம் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் நல்ல கதாபாத்திரத்தில் சூர்யாவின் நடிப்பு அட்டகாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாள இயக்குநர் பாசில் ஜோசப் தன்னுடைய படத்திற்கு கதாநாயகனாக சூர்யாவைத் தேர்ந்தெடுத்திருக்கும் தகவல் சமீபத்தில் வெளியானது.
இப்படத்தில் சூர்யா இணைவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அறிவிக்கவில்லை. படக்குழு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் அனைத்தும் கிடைக்கப்பெற்ற அடிப்படையில் எழுதப்பட்டது. படக்குழு மற்றும் இயக்குநர் ஆகியோர் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.