பிக் பாஸ் 8 டைட்டில் அடிக்கப்போவது இவங்கதான்..வெளியான ஓட்டு நிலவரத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 8யில் 23 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பான ஆட்டத்தைத் தொடங்கி டாஸ்க் பலவற்றைப் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் கொடுத்து வந்தது. இதில் கடைசியாக 100 நாட்கள் தாண்டி பவித்ரா, விஷால், சௌந்தரியா, முத்துகுமரன் மற்றும் ரயான் உள்ளிட்டோர் டைட்டில் போட்டியாளர்களாக உள்ளனர்.

பிக் பாஸ் வீட்டைவிட்டு வாரந்தோறும் டபுள் எவிக்‌ஷனில் போட்டியாளர்கள் வெளியேறுகின்றனர். கடைசியாக பணப்பெட்டியை வெளியில் சென்று எடுக்கும் போட்டியில் அதிர்ஷ்டவசமாக சௌந்தர்யா பணப்பெட்டி எடுக்காமல் உள்ளே வந்துவிட்டார். ஆனால் ஜாக்குலின் பணப்பெட்டியை எடுக்கச் சென்றபோது நேரம் தவறி வெளியில் மாட்டிக்கொண்டார். இதனால் ஜாக்குலின் வீட்டைவிட்டு வெளியேறினார். மேலும் யார் வெற்றிபெற அதிகம் வாய்ப்பு  உள்ளது என்று பார்க்கலாம். 

1 /8

ஜாக்குலின் வெளியேறிய பின் ஓட்டு எண்ணிக்கை கணிசமாகப் போட்டியாளர்களுக்குப் பிரிந்தது. 

2 /8

இணையத்தில் வெகுவாக வரலாகி வரும் ஓட்டு எண்ணிக்கை முதல் இரண்டு போட்டியாளர்களுக்கு அதிகமாக உள்ளதாக ஓட்டுத் தகவல் கூறப்படுகிறது.  

3 /8

முத்துகுமரன் மற்றும் சௌந்தர்யா  இருவரும் டைட்டலில் அதிகமான வாக்குடன் முன்னிலையில் உள்ளனர்.

4 /8

அடுத்ததாக ரயான் மற்றும் விஷால் இருவரும் முன்னிலையில் இருப்பதாக ஓட்டு எண்ணிக்கையில் தெரிகிறது.

5 /8

பவித்ரா குறைவான ஓட்டு எண்ணிக்கையுடன் பின்னிலையில் உள்ளார். இதில் முதல் இரண்டு இடத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

6 /8

முதல் இரண்டு போட்டியாளர்களில், அதாவது முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யா இருவரில் முத்துக்குமரன் பிக் பாஸ் 8 டைட்டிலில் வெற்றிபெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது. 

7 /8

டைட்டல் வின்னராக முத்துக்குமரனும் மற்றும் ரன்னராக சௌந்தர்யாவும் வருவார்கள் என்று அதிகமான ஒட்டு எண்ணிக்கை காட்டுகிறது.

8 /8

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் 8 பினாலேவில் முதல் இரண்டு போட்டியாளர்கள் முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யா ஆகியோர் யார் வெற்றியாளர்கள் என்று  உறுதியாகத் தெரியும்.