இயற்கையாகவே நரை முடியை கருப்பாக மாறனுமா? இந்த பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள்

Indigo powder for hair colour: இண்டிகோ பவுடரால் உங்கள் தலைமுடிக்கு கருப்பு சாயம் பூசலாம். எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 21, 2023, 11:11 AM IST
  • கருமையான கூந்தலுக்கு நிறத்தைக் கொடுப்பது இந்த மெலனின் தான்.
  • வெள்ளை முடி பிரச்சனையால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
  • நரை முடியை கருப்பாக்க பேஸ்ட் தயாரிப்பது எப்படி.
இயற்கையாகவே நரை முடியை கருப்பாக மாறனுமா? இந்த பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள் title=

கூந்தல் நிறத்திற்கு இண்டிகோ பவுடர்: சிறு வயதிலேயே நரை முடி இன்று ஒரு பிரச்சனையாகிவிட்டது. சில சமயங்களில் கெமிக்கல் கலர்களை பயன்படுத்துவதால் முடி நரைக்க ஆரம்பிக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் நரை முடியை கருப்பாக மாற்றும் அற்புத வழியை இங்கே கூற உள்ளோம், இது இயற்கையானது மற்றும் முடியில் உள்ள ரசாயன நிறத்தை விட நீண்ட காலம் நீடிக்கும்.

கூந்தல் நரைப்பதற்கான காரணம்
இயற்கையாகவே உடலில் மெலனின் அளவு குறையும் போது அது கூந்தலிலும் பிரதிபலிக்கும். கருமையான கூந்தலுக்கு நிறத்தைக் கொடுப்பது இந்த மெலனின் தான். இந்த மெலனின் உடலில் குறையும் போது நமது கூந்தலின் நிறம் மாறுகிறது. இது நரைமுடிக்கு முக்கிய காரணமாகும்.

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் வெள்ளை முடி பிரச்சனையால் மிகவும் சிரமப்படுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், மக்கள் கெமிக்கல் நிறைந்த ஹேர் டையைப் பயன்படுத்துகிறார்கள், இது உங்கள் தலைமுடிக்கு தீங்கு விளைவிக்கும். எனவே உங்கள் வெள்ளை முடியைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், இந்த கட்டுரையை உடனடியாக படித்து தீர்வு பெறுங்கள்.

மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... கொழுப்பை எரிக்கும் ‘சில’ உணவுகள்!

இயற்கை முடி சாயம்
இந்த இயற்கை முடி சாயத்தைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் தலைமுடி கருப்பாக மாறுவது மட்டுமல்லாமல், கூந்தலுக்கு பளபளப்பையும், வலிமையையும் தருவதோடு, உச்சந்தலையின் pH அளவையும் மேம்படுத்த உதவும். தலைமுடியை கருமையாக்க மருதாணி மற்றும் இண்டிகோ பவுடர் உங்களுக்கு முக்கியமாக தேவைப்படும், எனவே இப்போது இந்த ஹேர் கலர் பேஸ்ட்டை வீட்டில் எவ்வாறு தயாரிப்பது என்பதைக் கற்றுக்கொள்வோம்.

நரை முடியை கருப்பாக்க பேஸ்ட் தயாரிப்பது எப்படி:
1. ஒரு பாத்திரத்தில் தேயிலை இலைகளுடன் மருதாணி பொடியை கலந்து ஊற வைக்கவும்.
2. தலைமுடியை சுத்தம் செய்ய மருதாணி பேஸ்ட்டை தடவி 45 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
3. பிறகு தண்ணீரில் கூந்தலை நன்கு கழுவவும்; ஷாம்பு பயன்படுத்த வேண்டாம்.
4. தலைமுடியைக் கழுவிய பின் உலர விடவும்.
5. இப்போது வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, இண்டிகோ பவுடர் சேர்க்கவும். விரும்பினால், அதில் 1 டீஸ்பூன் முடி எண்ணெயை கலக்கவும்.
6. இந்த பேஸ்ட்டை வேர் முதல் முடியின் நுனி வரை தடவவும். ஆழமான கருப்பு நிறத்தைப் பெற 45 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை ஊற விடவும்.
7. பின்னர் தண்ணீரில் நன்றாகக் கழுவவும்.
8. குறைந்தது மூன்று நாட்களுக்குப் பிறகு ஷாம்பூவை பயன்படுத்தவும்.

கூந்தலுக்கு இண்டிகோ பவுடரின் நன்மைகள்:

முடி உதிர்வதை தடுக்கிறது
இண்டிகோ பவுடர் முடி உதிர்வதைத் தடுக்கிறது. இண்டிகோ பவுடரை எண்ணெயுடன் கலந்து, தலையில் மெதுவாக மசாஜ் செய்தால், மயிர்க்கால்கள் வலுவடைந்து, முடி உதிர்வதை நிறுத்தும்.

கருப்பு முடிக்கு இண்டிகோ பவுடர்
இண்டிகோ பவுடரின் நிறம் இயற்கையானது மற்றும் உங்கள் முடியின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது. இது தவிர, உங்கள் தலைமுடியை நீண்ட நேரம் கருப்பாக வைத்திருக்கவும், எந்தத் தீங்கும் ஏற்படாமல் இருக்கவும் உதவும்.

பொடுகை குறைக்க உதவும்
பொடுகு பிரச்சனையை குறைக்க இண்டிகோ பவுடர் வேகமாக செயல்படுகிறது. இது முதலில் உங்கள் தலையின் தோலை சுத்தம் செய்கிறது. இது அழுக்கு மற்றும் எண்ணெய் காரணமாக சேதமடைந்த கூந்தலுக்கு உயிர் கொடுப்பது மட்டுமல்லாமல், முடியில் இருந்து வெளியேறும் அதிகப்படியான எண்ணெயைக் குறைக்கவும் உதவுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வாய் துர்நாற்றத்தால் மிகவும் கஷ்டப்படுகிறீர்களா... இந்த வீட்டு வைத்தியத்தை தெரிந்துகொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News