புது டெல்லி: உலகின் 216 நாடுகள் தற்போது கொரோனா வைரஸுடன் (Coronavirus) போராடி வருகின்றன. உலகளவில், இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டியுள்ளது. இறப்பு எண்ணிக்கையும் 5 லட்சத்துக்கு மேலாக அதிகரித்துள்ளது.
இப்போது அனைவரின் மனதிலும் ஒரே ஒரு கேள்வி மட்டுமே வருகிறது, நாம் எவ்வளவு காலம் கொரோனாவை எதிர்த்துப் போராட வேண்டும்? பயனுள்ள மருந்து அல்லது தடுப்பூசி எப்போது கிடைக்கும்? இதுபோன்ற கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை.
இருப்பினும், உலக சுகாதார (World Health Organization) அமைப்பின் கூற்றுப்படி, ஜூன் 28 நிலவரப்படி, உலகளவில் 148 கொரோனா தடுப்பூசிகள் குறித்து சோதனை நடந்து வருகின்றன. இவற்றில், 131 தடுப்பூசிகள் முன் மருத்துவ செயல்பாட்டில் உள்ளன, மீதமுள்ள 17 தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனை கட்டத்தின் கீழ் வந்துள்ளன.
எந்தவொரு நோய்க்கும் தடுப்பூசி (Corona Vaccine) கண்டுபிடிக்க பொதுவாக 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ஆனால், உலகளவில் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்க வேண்டும் என விரைவான பணிகள் நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது ஜூன் 2021 க்குள் ஒரு நல்ல தடுப்பூசி கிடைக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.
READ | கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க Dexamethasone மருந்துகளை பயன்படுத்த ஒப்புதல்
READ | இறுதி சோதனை கட்டத்தில் கோவிட் -19 தடுப்பூசி; விரைவில் அறிமுகம்: ஆக்ஸ்போடு குழு
சில நாட்களுக்கு முன்பு, WHO தலைவர் டெட்ரோஸ் அடினோம் (Tedros Adhanom) கேப்ரேசியஸும் (Gabresius) ஒரு வருடத்திற்குள் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறார்.
3-ம் கட்டத்தில்ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிட் தடுப்பூசி:
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு (Oxford) பல்கலைக்கழகம் மற்றும் அங்குள்ள அஸ்ட்ராஜெனெகா என்ற நிறுவனம் ஒரு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த தடுப்பூசி மனித பரிசோதனையின் மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த தடுப்பூசியை தயாரிக்க அஸ்ட்ராசெனெகா பல நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது. இது இந்தியாவின் சீரம் நிறுவனத்தையும் கொண்டுள்ளது. இந்த நிறுவனங்களின் உதவியுடன், 2021 ஜூன் மாதத்திற்குள் 200 மில்லியன் தடுப்பூசிகளை தயாரிக்க விரும்புகிறது.
இந்தியாவிலும் 14 தடுப்பூசிகள் குறித்து சோதனை:
இந்த மாத தொடக்கத்தில், சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் சிங் (Harsh Vardhan) இந்தியாவில் 14 கொரோனா தடுப்பூசிகள் மீது பணிகள் நடந்து வருவதாக தெரிவித்திருந்தார். இதில் 4 தடுப்பூசிகளின் பணிகள் அடுத்த 3 முதல் 5 மாதங்களில் மருத்துவ பரிசோதனைகளின் கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவை அனைத்தையும் தவிர, உலகில் செயல்பட்டு வரும் 148 தடுப்பூசிகளில் 5 இந்திய நிறுவனங்களிடமிருந்தோ அல்லது இந்திய நிறுவனங்களின் பங்களிப்பில் முயற்சி நடந்து வருகிறது. குஜராத்தின் ஜைடஸ் காடிலா நிறுவனமும் உள்ளது. அதே நிறுவனம் 2010 இல் நாட்டில் பன்றிக்காய்ச்சலுக்கான முதல் தடுப்பூசியை தயாரித்தது.
READ | வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு Oximeter எவ்வளவு அவசியம்
READ | கொரோனாவுக்கு மருந்து கிடைத்தது! மீண்டு வரும் நோயாளிகள்
கூடுதலாக, பாரத் பயோடெக் மற்ற நோய்த்தடுப்பு மருந்துகள், இந்தியன் இம்யூனோலாஜிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா 1-1 என மற்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் சேர்ந்து தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.