எடை குறைந்து ஸ்லிம்மா, ஃபிட்டா இருக்க ஆசையா? இந்த காலை உணவுகள் கை கொடுக்கும்

Breakfast for Weight Loss: உடல் எடையை குறைக்க பலரும் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். எனினும், சரியான காலை உணவு எடை கட்டுப்பாட்டில் முக்கிய இடத்தை வகிப்பதாக சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 31, 2022, 12:37 PM IST
  • முட்டை ஒரு சூப்பர்ஃபுட்.
  • இது ஆரோக்கியமான காலை உணவு வகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
  • ஒரு முட்டையில் 7 கிராம் புரதம் மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
எடை குறைந்து ஸ்லிம்மா, ஃபிட்டா இருக்க ஆசையா? இந்த காலை உணவுகள் கை கொடுக்கும் title=

ஆரோக்கியமான காலை உணவு: ஒரு நாளில் நாம் உண்ணும் உணவுகளில் காலை உணவு மிகவும் முக்கியமான உணவாகும். ஏனென்றால் இரவு முழுவதும் நமது வயிறு காலியாக இருக்கிறது. அதன் பிறகு நாம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உண்ணும் உணவு காலை உணவாகும். இரவு முழுவதும் ஒன்றும் உண்ணாமல் இருப்பதால், உடலில் பலவீனம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு இருக்கும். பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் காலை உணவைத் தவிர்க்க வேண்டாம் என்று அறிவுறுத்துவதற்கு இதுவே காரணமாகும். இருப்பினும், நீங்கள் காலையில் ஆரோக்கியமான பொருட்களை மட்டுமே சாப்பிடுவது மிகவும் முக்கியமாகும்.

உடல் எடையை குறைக்க பலரும் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். எனினும், சரியான காலை உணவு எடை கட்டுப்பாட்டில் முக்கிய இடத்தை வகிப்பதாக சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். சரியான காலை உணவை உட்கொள்ளாவிட்டால், உடல் எடையை குறைப்பது அல்லது பராமரிப்பது கடினம். உடல் எடையை குறைக்கவும் உடலை ஃபிட்டாக வைக்கவும் சாப்பிட வேண்டிய முக்கிய காலை உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இப்படிப்பட்ட காலை உணவை உட்கொள்வது முக்கியம்

நாள் முழுதும் உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளும் உணவுகளை காலையில் உட்கொள்வது மிக அவசியமாகும். இவை மிக லைட்டான உணவுகளாகவும் இருக்க வேண்டும். காலியான வயிற்றில் இவற்றை நாம் உட்கொள்வோம் என்பதால், வாயுவை ஏற்படுத்தும் உணவுகளை காலையில் சாப்பிடக்கூடாது. 

முட்டை

முட்டை ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். இது ஆரோக்கியமான காலை உணவு வகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒரு முட்டையில் 7 கிராம் புரதம் மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி, உடலை பலப்படுத்துகிறது.

ஓட்ஸ்

உங்கள் நாளை ஆரோக்கியமாக தொடங்குவதற்கு ஓட்ஸ் சிறந்த காலை உணவு விருப்பங்களில் ஒன்றாகும். ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் ஓட்ஸ் உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். ஓட்ஸின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது தசை வளர்ச்சி மற்றும் எடை இழப்பு ஆகிய இரண்டையும் அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.

மேலும் படிக்க | நீரழிவு நோயை இயற்கையாகவே கட்டுப்படுத்தும் உணவுகள்! 

புதிய பழச்சாறு

நீங்கள் லைட்டான சிற்றுண்டியை உட்கொள்ள விரும்பினால், புதிதாக பிழிந்த பழச்சாறு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதில் பல ஊட்டச்சத்துக்கள் இருப்பதோடு, ஆண்டி ஆக்சிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இவை அனைத்தும் நமது உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், அதே போல் எடையை பராமரிக்கவும் உதவுகின்றன.

யோகர்ட்

யோகர்ட் நமது நாளை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க சிறந்த காலை உணவாக இருக்கும். சாதாரண தயிரில் 9 கிராம் புரதம் மட்டுமே உள்ளது. ஆனால், யோகர்டில் 15-20 கிராம் புரதம் உள்ளது. இதை அதிக சத்தானதாக மாற்ற, அதில் சில பழங்கள் மற்றும் நட்சுகளை சேர்க்கலாம். இதை தொடர்ந்து காலை உணவில் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மூளை சூப்பர் கம்ப்யூட்டர் போல் இயங்க வேண்டுமா! சில எளிய பயிற்சிகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News