உடல் எடையைக் குறைக்கும் உணவுகள்: பல நேரங்களில் உடல் எடையை குறைக்க கடினமாக உழைக்கிறோம். சத்துள்ள பழங்கள், காய்கறிகள், ஆரோக்கியமான பழச்சாறுகளை உட்கொள்கிறோம். ஜிம் சென்று பல வித முயற்சிகளை எடுக்கிறோம், உடற்பயிற்சி செய்கிறோம். எனினும், இப்படி பல வித நடவடிக்கைகளை எடுத்தாலும், உடல் எடை குறைவதில்லை. எனினும் சிறிதளவு ஆரோக்கியமற்ற உணவை உட்கொண்டாலும், நாம் செய்யும் கடின உழைப்பு அனைத்தும் வீணாகிவிடும்.
உடல் பருமனால், உடல் வடிவம் முற்றிலும் கெட்டு, அழகு பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், பல வித நோய்களும் நம்மை ஆட்கொள்கின்றன. இதனால், நம்மில் பெரும்பாலானோர் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறோம். வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேர்வதற்கு நாம் தான் காரணம் என்பதில் சந்தேகமில்லை. நம் உடல் பருமனை அதிகரித்து ஆரோக்கியத்தை கெடுக்கும் சில உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆரோக்கியமற்ற உணவுகள்
பல ஆரோக்கியமற்ற உனவுகள் மிக சுவையாக இருப்பதால், அவற்றை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. ஆனால், இந்த உணவுகள் உயர் இரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு, அதிக கொழுப்பு, கரோனரி தமனி நோய் மற்றும் மூன்று நாள நோய் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கின்றன.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
சமையலில் பொருட்களை வறுக்க சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்துவது மிகவும் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த எண்ணெய் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இது உடல் பருமனைத் தவிர, அதிக கொலஸ்ட்ரால், மாரடைப்பு மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதற்கு பதிலாக வர்ஜின் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
உருளைக்கிழங்கு சிப்ஸ்
உருளைக்கிழங்கு சிப்ஸ் பிரியர்களுக்கு பஞ்சமில்லை. காலை முதல் மாலை வரை ஸ்நாக்ஸாக இதை பலர் சாப்பிடுவார்கள். ஆனால் இதில் டிரான்ஸ் ஃபேட்ஸ் மற்றும் சோடியம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, கொலஸ்ட்ரால் அதிகரித்து, பின்னர் வயிற்றில் கொழுப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகின்றது.
மேலும் படிக்க | கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் என்ன? குழந்தையின்மைக்கு தீர்வு என்ன?
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
கடந்த சில தசாப்தங்களில், பதப்படுத்தப்பட்ட உணவுகளின் போக்கு மிகவும் அதிகரித்துள்ளது. இவை பல நாட்களுக்கு பாதுகாக்கப்பட்டு உட்கொள்ளக்கூடியவை. ஆனால், இவற்றை தயார் செய்ய பின்பற்றப்படும் செயல்முறைகள் எடை அதிகரிப்புக்கு காரணமாகின்றன.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை
நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் வெள்ளை சர்க்கரையை சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை என்று அழைக்கிறார்கள். அதன் உதவியுடன் செய்யப்படும் இனிப்புகள், ஐஸ்கிரீம், பானங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதால், உடலுக்குள் கொழுப்பு சர்க்கரையாக மாறத் தொடங்குகிறது, இதனால் உடல் பருமன் அதிகரிக்கிறது, நீரிழிவு நோய்க்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.
கூடுதலாக இந்த பழங்களையும் சாப்பிடுவத தவிர்க்க வேண்டும்:
- திராட்சை: 100 கிராம் திராட்சைப்பழத்தில் சுமார் 16 கிராம் சர்க்கரை மற்றும் 70 கலோரிகள் உள்ளன. ஆகையால் நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், குறைந்த அளவில் திராட்சை சாப்பிடுங்கள்.
- அன்னாசிப்பழம்: உடல் எடையை குறைக்க விரும்பினால், அன்னாசிப்பழத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் அதிக கலோரிகள் மற்றும் சர்க்கரை உள்ளது. இது உங்கள் எடையை அதிகரிக்கும். ஆகையால் அதை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.
- மாம்பழம்: மாம்பழத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கலோரி அளவு மிக அதிகம். 100 கிராமில் 80 முதல் 100 கலோரிகள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதிக மாம்பழங்களை உட்கொண்டால், உங்கள் எடை வேகமாக அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க |மாங்காயில் மிளகாய் சேர்த்து சாப்பிடுவது ஏன்? இதயத்துக்கு நல்லதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ