40 வயசுலயும் 20 வயசு போல இருக்கணுமா? இந்த டயட் சார்ட் ட்ரை பண்ணுங்க

How To Lose Weight: கோடை காலம் வந்தாலே உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். உங்கள் எடையை எளிதாகக் குறைக்கும் சில எளிய வழிகளை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 13, 2023, 11:53 AM IST
  • கோடையில் இந்த வழிகளில் உங்கள் எடையைக் குறைக்கவும்.
  • தினமும் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்.
  • உடல் எடை குறைக்க கோடை காலம் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
40 வயசுலயும் 20 வயசு போல இருக்கணுமா? இந்த டயட் சார்ட் ட்ரை பண்ணுங்க title=

உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி: கோடை காலம் வந்தாலே உடல் எடையை குறைக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்பார்கள். ஏனென்றால், இந்தப் பருவத்தில் விதவிதமான ஆடைகளை அணி அனைவரும் விரும்புவார்கள். அதே சமயம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள கோடை காலம் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் எடையை குறைக்க விரும்பினால், நீங்கள் சில சிறந்த முறைகளை பின்பற்றலாம். வாருங்கள், உங்கள் எடையை எளிதாகக் குறைக்கும் சில எளிய வழிகளை தெரிந்துக்கொள்வோம்.

கோடையில் இந்த வழிகளில் உங்கள் எடையைக் குறைக்கவும்

அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், தினமும் அதிகாலையில் எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். ஏனென்றால், அதிகாலையில் எழுந்தால், இரவிலும் சீக்கிரம் தூங்குவீர்கள். இது உங்கள் எடையை எளிதாகக் குறைக்கலாம். அதனால்தான் தினமும் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க | பூசணி விதைகளை தூக்கி எறியும் பழக்கம் உள்ளதா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!

நிறைய காய்கறிகள் சாப்பிடுங்கள்
உங்கள் உணவில் அதிகமான காய்கறிகளை சேர்த்துக் கொண்டால், அது உங்கள் எடையை வேகமாக குறைக்கும், ஏனெனில் காய்கறிகளில் பல வகையான வைட்டமின்கள் உள்ளன, எனவே அவை எடையைக் குறைக்க உதவுகின்றன.

பழங்களை சாப்பிடுங்கள்
நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், உங்கள் உணவில் அதிக பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை உட்கொள்வதன் மூலம், உங்கள் எடையை எளிதாகக் குறைக்கலாம்.

பொரித்த உணவி பொருட்களிலிருந்து விலகி இருங்கள்
வெயில் காலத்தில் பொரித்த பொருட்களை சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும், ஆனால் இவற்றை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பொரித்த பொருட்களை உட்கொள்வதால் உடல் எடை அதிகரிக்கும், எனவே பொரித்த பொருட்களிலிருந்து விலகி இருங்கள்.

இனிப்பு பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்
அனைவருக்கும் இனிப்பு உணவு பொருள் மிகவும் பிடிக்கும். ஆனால் நீங்கள் உங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், இனிப்புகளை உடனடியாகத் தவிர்க்கவும், ஏனெனில் இனிப்புகள் உங்கள் எடையை அதிகரிக்கச் செய்யும்.

நிறைய தண்ணீர் குடிக்கவும்
கோடை காலத்தில் மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் இது உடலை நீரேற்றமாக வைத்திருப்பதுடன் உங்கள் எடையையும் குறைக்கிறது. எனவே, உடல் எடையை குறைக்க, நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Peanut Butter: ஒரு ஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெயில் முட்டையை விட அதிக புரதம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News