கழுத்தில் மருக்களால் பிரச்சனையா? இப்படி பண்ணா சட்டுனு போயிடும்

Wart Removal Home Remedies: மருக்களால் தொல்லையா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களால் நிவாரணம் பெறலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 3, 2022, 05:53 PM IST
  • நம்மில் பலருக்கு மருக்களால் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு.
  • சிலருக்கு கழுத்துப்பகுதியில் மிக அதிகமாக மருக்கள் இருக்கும்.
  • கழுத்தில் உள்ள மருக்கள் பிரச்சனையை நீக்க சில வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தலாம்.
கழுத்தில் மருக்களால் பிரச்சனையா? இப்படி பண்ணா சட்டுனு போயிடும்  title=

நம்மில் பலருக்கு மருக்களால் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. சிலருக்கு கழுத்துப்பகுதியில் மிக அதிகமாக மருக்கள் இருக்கும். ஒன்றிரண்டு மருக்கள் இருந்தால் அவற்றால் பெரிய பிரச்சனை ஏற்படுவதில்லை. எனினும், இவற்றின் அளவு அதிகமானால், இது பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. இந்த பிரச்சனை ஹ்யூமன் பேபிலோனா வைரஸால் ஏற்படுகிறது. சில வீட்டு வைத்தியங்கள் இந்த சிக்கலை சமாளிக்க உதவும்.

நம் பிரச்சனைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றக்கூடிய பல விஷயங்கள் நம்மைச் சுற்றி உள்ளன. அந்த பிரச்சனைகளில் ஒன்று கழுத்தில் உள்ள மருக்கள் பிரச்சனை. கழுத்தில் உள்ள மருக்கள் பிரச்சனையை நீக்க சில வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தலாம். இந்த பதிவில் இந்த வீட்டு வைத்தியங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம். 

மேலும் படிக்க | உடல் எடையை சட்டுனு குறைக்கணுமா? இத பண்ணுங்க போதும் 

கழுத்தில் உள்ள மருக்களை அகற்றுவதற்கான வீட்டு வைத்தியம்:

1. வாழைப்பழத் தோல்

கழுத்தில் உள்ள மருக்களை நீக்க வாழைப்பழத் தோலைப் பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு வாழைப்பழத் தோலைத் தடவி ஒரு துணியால் கட்டவும். சிறிது நேரம் கழித்து வாழைப்பழத் தோலை அகற்றவும். இதை தொடர்ந்து செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து மருக்கள் உதிர்ந்து காணப்படும்.

2. ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்துவதன் மூலமும் கழுத்தில் உள்ள மருக்கள் பிரச்சனையை சமாளிக்கலாம். ஒரு காட்டன் துணியில் சில துளிகள் ஆப்பிள் வினிகரை எடுத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். சிறிது நேரம் கழித்து உங்கள் தோலை சுத்தம் செய்யவும். சில நாட்களுக்குப் பிறகு, மருக்கள் தானாகவே காய்ந்துவிடும். ஆப்பிள் சைடர் வினிகரை உபயோகிக்கும்போது ஏதேனும் எரிச்சல் ஏற்பட்டால், கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தலாம்.

3. பூண்டு

கழுத்துப் பகுதியில் உள்ள மருக்களை நீக்க பூண்டையும் பயன்படுத்தலாம். பூண்டு விழுதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் மருக்கள் விரைவில் மறைந்துவிடும். பாதிக்கப்பட்ட பகுதியில் பூண்டு விழுதை தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து அந்த இடத்தை சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் மருக்கள் விரைவில் விழுவதைக் காணலாம். இதை வாரத்திற்கு 2 முறை மட்டுமே செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த  தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Belly Fat: தினமும் இந்த பழங்களை சாப்பிட்டா தொப்பை கொழுப்பு கரையும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News