பழங்களில் ஆரோக்கிய நன்மைகள் ஏராளமாக உள்ளன. வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்த பழங்கள் முற்றிலும் நன்மை பயக்கும். பழங்களை சாப்பிடுவது எவ்வளவு அவசியமோ, அதே அளவு பழங்களை சரியான முறையில் சாப்பிடுவதும் முக்கியம். பழங்களை தவறான முறையில் சாப்பிட்டால், முழுமையான ஊட்டச்சத்து கிடைக்காது. பப்பாளி, தர்பூசணி போன்ற பழங்களை தோல் நீக்கித் தான் சாப்பிட வேண்டும், ஆனால் சில பழங்களின் தோல்களில் ஊட்டச்சத்தின் பொக்கிஷம் அதிகம் உள்ளது. அத்தகைய பழங்களின் தோலை அகற்றுவது தவறு. எந்தெந்த பழங்களை தோலுரித்து உண்ணக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
கிவி
கிவி மிகவும் ஆரோக்கியமான பழம். இதன் தோலும் மிகவும் நன்மை பயக்கும். கிவியின் தோல் சிறிது கடினமாக இருக்கும். இதன் காரணமாக பலர் அதை சாப்பிடாமல் எறிந்து விடுகிறார்கள். வைட்டமின்கள் மற்றும் பல தாதுக்கள் அதன் தோலில் நிறைந்து உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
பீச் என்னும் குழிப்பேரி
பேரிக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பீச்சின் தோலில் பல ஆரோக்கியமான சத்துக்களும் உள்ளன. பீச் தோலில் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இது இதயம் மற்றும் செரிமான அமைப்புக்கு மிகவும் நன்மை பயக்கும்.
சப்போட்டா
பெரும்பாலானோர் சப்போட்டாவை தோலுரித்து சாப்பிடவே விரும்புவார்கள். அதன் தோலை அகற்றுவது கடினமாகவும் இருக்காது. பின்னர் அதை சாப்பிடுவதற்கு அத்தகைய சுவையாக இல்லை என்று நினைத்து பெரும்பாலானோர் சப்போட்டாவின் தோலை தூக்கி எறிந்து விடுகிறார்கள். சப்போடா தோல் பல நோய்களுக்கு தீர்வாக அமையும்.
பேரிக்காய்
பேரிக்காய் தோலிலும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. அதன் பழத்துடன் தோலையும் உட்கொள்ள வேண்டும். பேரிக்காய் தோலில் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. பேரிக்காய் தோல் இதயத்திற்கு நன்மை பயக்கும்.
ஆப்பிள்
ஆப்பிள் கிட்டத்தட்ட அனைத்து வகையான நோய் பாதிப்பிலும் தவிர்க்காமல் உண்ணப்படுகிறது. பலர் ஆப்பிளை தோலுரித்து சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் அவ்வாறு செய்வது சரியல்ல. ஆப்பிள் தோலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆப்பிள் தோல் இதயத்திற்கும் நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நெல்லிக்காய் ‘4’ நோயாளிகளுக்கு மட்டும் எதிரி
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சர்க்கரை வியாதி இருக்கா? கண்களுக்கு இந்த பாதிப்புகள் வரலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ