எலும்புகள் வலுவாக இருக்க வேண்டுமா; இந்த எண்ணெய்களை தொடர்ந்து பயன்படுத்தவும்

எலும்பை வலுப்படுத்தும் குறிப்பிட்ட எண்ணெய்களை தொடர்ந்து பயன்படுத்தினால், எலும்புகள் வலுப்படுவதோடு, வலிகளில் இருந்தும் முழுமையாக நிவாரணம் கிடைக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 9, 2022, 04:00 PM IST
எலும்புகள் வலுவாக இருக்க வேண்டுமா; இந்த எண்ணெய்களை தொடர்ந்து பயன்படுத்தவும் title=

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், எலும்புகளும் பாதிக்கப்படுகின்றன. உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காதபோது அல்லது நீங்கள் போதுமான உடற்பயிற்சி செய்யாமல் இருக்கும் போது, எலும்புகள் வலு இழப்பதோடு, வலிகளும் ஏற்படத் தொடங்குகின்றன. இன்றைய இளைஞர்களும் இந்த நோயின் பிடியில் சிக்குவதற்கு இதுவே காரணம். 

இருப்பினும், சில எண்ணெய்களின் உதவியுடன், எலும்புகளை வலுவாக்குவதுடன் அதன் வலியையும் போக்கலாம். அஎலும்புகளை வலுப்படுத்தக்கூடிய நான்கு எண்ணெய்கள் எவை என்று பார்ப்போம்.

1. கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய் எலும்புகளை வலுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உடலை வலுவாக்குவது மட்டுமின்றி, மூட்டு வலிக்கும் இந்த எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த எண்ணெயைக் கொண்டு உடலை மசாஜ் செய்யலாம். இதன் மூலம் உங்களுக்கு நிச்சயம் பலன் அடைவீர்கள். இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதால் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கிறது.

மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

2. பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய் எலும்புகளை வலுப்படுத்தும் என்பது பலருக்கு தெரிவதில்லை. இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளது. இது புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது, பாதாம் எண்ணெயைக் கொண்டு உடலையும் மசாஜ் செய்யலாம்.

3. நல்லெண்ணெய் 

எலும்புகள் வலுப்பெற, நல்லெண்ணெயைக் கொண்டு உடலை மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். வலிகளுக்கு நிவாரணம் கிடைக்கும். இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், உங்கள் உடலும் சருமமும் மிகவும் அழகாக மாறும்.

4. ஆலிவ் எண்ணெய் 

ஆலிவ் எண்ணெயும் மற்ற எண்ணெய்களைப் போலவே எலும்பை வலுப்படுத்தும். இதைப் பயன்படுத்துவதன் மூலம், உடல் வலியிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். அதாவது, இந்த எண்ணெயைக் கொண்டு உங்கள் உடலையும் மசாஜ் செய்யலாம். இதில் இருந்தும் நிவாரணம் பெறுவீர்கள். 

மேலே குறிப்பிட்டுள்ள இந்த நான்கு எண்ணெய்களையும் நீங்கள் கண்டிப்பாக முயற்சிக்கலாம். எலும்பு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விபட்டு, வலியில்லாமல் நிம்மதியாக இருக்க இன்றே எலும்புகளை வலுவாக்கும் இந்த எண்ணெய்களில் ஒன்றை தொடர்ந்து பயன்படுத்தவும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News