எச்சரிக்கை! காலை உணவை மிஸ் பண்ணவே கூடாது... காரணங்கள் இதோ..!!

இன்றைய பிசியான உலகில், குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பலர், ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள்  வரை, நேரம் இல்லை என காலை உணவை தவிர்த்து விடுகின்றனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 23, 2024, 08:15 PM IST
  • சமச்சீரான காலை உணவு மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
  • காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்.
  • காலை உணவு தவிர்ப்பதால் மிக மோசமான உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
எச்சரிக்கை! காலை உணவை மிஸ் பண்ணவே கூடாது... காரணங்கள் இதோ..!! title=

இன்றைய பிசியான உலகில், குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பலர், ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள்  வரை, நேரம் இல்லை என காலை உணவை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் காலை உணவு தவிர்ப்பதால் மிக மோசமான உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரிவதில்லை.

காலை உணவு மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்

பலர் வீடுகளில், வேலைக்கு செல்லும் நபர்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள், ஒரு டம்ளர் பால் மட்டும் அருந்தி விட்டு, காலை உணவை தவிர்க்கும் போக்கு அதிகம் உள்ளது. இதனால் ஆற்றல் அளவு மிக குறைவாக இருக்கும். குழந்தைகளுக்கு வகுப்பில், சரியாக கவனம் செலுத்த முடியாது. சேலைக்கு செல்பவர்களும் செயல் திறனுடன் பணியாற்ற முடியாது. சமச்சீரான காலை உணவு மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். 

காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்

உணவைத் தவிர்ப்பது எடையைக் குறைக்க உதவும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. காலை உணவைத் தவிர்ப்பது, உடலின் வளர்சிதை மாற்றத்தை சீர்குலைத்து, எடை அதிகரிப்புக்கு பங்களிக்கும். இதனால், நாம் நம்மையும் அறியாமல் அதிகமாக சாப்பிட்டு விடுவோம். காலை உணவு என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உட்கொள்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த உணவைத் தவிர்ப்பது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இது காலப்போக்கில் உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். காலை உணவை தவிர்த்தால், ரத்த சோகை, பலவீனம், உடல் பருமன் போன்ற பல பிரச்சினைகள் வந்து சேரும். 

காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் மன நல பாதிப்புகள் மற்றும் நோய்கள்

காலை உணவை தவிர்க்கும் பழக்கத்தினால், டைப் 2 நீரிழிவு, இதய நோய் மற்றும் வளர்சிதை மாற்றம் மந்தமடைதல் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. காலை உணவு இல்லாததால், இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது, மனநிலை மாற்றங்கள், எரிச்சல் மற்றும் பதற்றம் போன்றவற்றை ஏற்படுத்தும். நன்கு சமச்சீரான காலை உணவு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மனநிலையை சிறப்பாக வைக்கிறது.

காலை உணவின் முக்கியத்துவம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காலை உணவு என்பது மிக அவசியம்.  நாள் முழுவதும் புத்துமுயற்சியுடன் சுறுசுறுப்பாக இருக்க காலை உணவை தவிர்க்கவே கூடாது. எனவே ஆரோக்கியமான காலை உணவு உடன் நாளை தொடக்கவும்.காலை உணவுக்கான தேர்வு மிக சிறந்ததாக இருக்க வேண்டும்.

காலை உணவுக்கான தேர்வுகள்

காலை உணவிற்கு, காய்கறிகள் சேர்ந்த சாம்பார் மற்றும் ஆரோக்கியமான தேங்காய் சட்னியுடன் கூடிய இட்லி மிகவும் சிறந்தது. அதேபோல் காய்கறி சேர்த்த உப்புமா வகைகள், சிறுதானியங்களை கொண்டு செய்த பொங்கல் வகைகள் ஆகியவை சமச்சீரான சத்துக்கள் நிறைந்தவை. இது நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது. ஆற்றல் குறையாமல் இருந்தால் தான், நமது செயல் திறன் சிறப்பாக இருக்கும்.

ஃப்ரெஷான பழங்கள், காய்கறிகள், பருப்பு, உலர் பழங்கள், முழு தானியங்கள் ஆகியவை காலை உணவுக்கான சிறந்த தேர்வுகள். காலை உணவு  உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். காலை உணவு மட்டுமல்ல, பொதுவாகவே எல்லா நேரங்களிலும் ஆரோக்கியமான உணவு அவசியம் என்றாலும், காலை உணவு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எல்லோரும் புரிந்து கொள்வது நல்லது.

Trending News