Who Is Hemant Soren : ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகல் உள்ளன. இவற்றிற்கு, கடந்த நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைப்பெற்றது. அதன்படி, வாக்கு எண்ணிக்கைகள் இன்று நடைப்பெற்றன.
முன்னிலையில் இருந்த NDA கூட்டணி:
ஜார்க்கண்ட் தொகுதியின் வாக்கு எண்ணிக்கைகள் இன்று, தொடங்கிய போது ஆரம்பத்தில் என்டிஏ கூட்டணி 41 இடங்களில் முன்னிலையில் இருந்தன. எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி 32 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. வெற்றி பெற, பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை என்ற பட்சத்டில், பாஜக கூட்டணி அந்த எண்ணிக்கையை அடையும் என்று எதிபார்க்கப்பட்டது.
முன்னிலை பெற்ற இந்தியா கூட்டணி!
பாஜக முன்னிலை பெற்ற விவரம் வெளியான சிறிது நேரத்திலேயே, நிலைமை தலைகீழ் ஆனது. வாக்கு எண்ணிக்கைகள் தொடர்ந்து நடைபெற, இந்தியா கூட்டணி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிக்க ஆரம்பித்தது. தற்போது, இந்தியா கூட்டணி 49 இடங்களிலும், பாஜகவின் என்டிஏ கூட்டணி 30 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
முதல்வராகும் ஹேமந்த் சோரன்!
இந்தியா கூட்டணியில் உள்ள ஜேஎம்எம் கட்சி, 30 இடங்களில் முன்னிலை பெற்றிருக்கிறது. இதனுடன் சேர்ந்து காங்கிரஸும் 13 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. கூடவே, ஆர்ஜேடி கட்சியின் 5 இடங்களில் முன்னிலை பெற்றிருக்கிறது. இதனால், அதன்படி, ஜேஎம்எம் கட்சி சார்பாக போட்டியிட்ட ஹேமந்த் சோரன், ஜார்கண்ட் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். இதனால், ஜேஎம்எம் கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜார்கண்டில் ஆட்சி அமைப்பது உறுதியாகி இருக்கிறது.
யார் இந்த ஹேமந்த் சோரன்?
2019ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலின் போது, அப்போது தனிப்பெரும் கட்சியாகவும் ஆளுங்கட்சியாகவும் இருந்தது, பாஜக. அந்த கட்சியை, தனது கூட்டணி வியூகத்தால் வீழ்த்தி பெரு வெற்றி பெற செய்து முதலமைச்சர் பதவியில் அமர்ந்தவர், ஹேமந்த் சோரன். இவருக்கு வயது 43 வயதாகிறது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவராகவும், இந்தியா கூட்டணியின் இந்த தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர் ஆகவும் விளங்கியவர், ஹேமந்த் சோரன். இவர், ஜேஎம்எம் கட்சியின் நிறுவனராகவும், 3 முறை முதலமைச்சராகவும் இருந்த சிபு சோரனின் மகன் ஆவார்.
2009ஆம் ஆண்டு முதல் கட்சியின் முகமாக வலம் வரும் ஹேமந்த், 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருப்பதாக கூறப்படுகிறது. 2009-2010ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த இவர், 2010ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் துணை முதலமைச்சராக ஆனார்.
மாநிலத்தின் இளம் முதலமைச்சர்:
2013ஆம் ஆண்டு, ஜூன் மாதம் ஹேமந்த் மாநிலத்தின் முதல் முதலமைச்சராக பதவியேற்றார். அதன் பிறகு, 2014ஆம் ஆண்டு டிசம்பர் வரை முதலமைச்சராக நீடித்தார். 2018ஆம் ஆண்டில், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிகளை இணைத்து, பெரிய கூட்டணி அமைத்ஹ்ட சோரன், மாநில பாஜக அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டார்.
அரசு பள்ளிகளை இணைத்ததற்கு எதிர்ப்பு, பணி நிரந்தரம் கேட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு ஆதரவு, மது விற்பனைக்கு எதிர்ப்பு என அனைத்திற்கும் குரல் கொடுத்தார். இதனால், இவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. ஜார்க்கண்டில் பழங்குடியினர் நலன், கிராமப்புற மேம்பாடு, சுகாதாரம் மற்றும் கல்வி, விவசாயக் கடன் தள்ளுபடி, வேலைவாய்ப்பு உத்தரவாதம் போன்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் இவரது தலைமையிலான அரசு கவனம் செலுத்தி வருகிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் இவர், இந்த தேர்தல் கணக்கெடுப்புகளை அடுத்து தற்போது மீண்டும் முதலமைச்சராக மாற இருக்கிறார்.
மேலும் படிக்க | மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்? ஏக்நாத் ஷிண்டே vs தேவேந்திர ஃபட்னாவிஸ்
மேலும் படிக்க | கேரளா வயநாடு இடைத்தேர்தல் முடிவுகள் 2024: பிரியங்கா காந்தி முன்னிலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ