உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். சமைக்கும் உணவுக்கு உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. உப்பு இல்லை என்றால் அந்த உணவை சாப்பிட முடியாது. உணவிற்கு சுவையைக் கூட்டும் உப்பு உங்கள் தலைமுடியை கருப்பாகவும், அடர்த்தியாகவும், அழகாகவும் மாற்றும் என்பது வெகு சிலருக்குத் தான் தெரியும். ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கு உப்பு எப்படு உதவும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
தலைமுடியை சுத்தம் செய்ய சீயக்காய் பொடியைக் கொண்டு முடியைக் கழுவும் பழக்கம் தான் முதலில் இருந்து. தற்போது தான் ஷாம்பூ பய்னபடுத்துகிறோம். இயற்கை பராமரிப்பை விரும்புபவர்கள் உப்பையும் பயன்படுத்தலாம் என்ர ஆச்சர்ய தக்வல் வெளியாகியுள்ளது. எனவே உப்பைக் கொண்டு முடியை ஆரோக்கியமாக்குவது எப்படி என்று பார்ப்போம்.
மேலும் படிக்க | வெள்ளை முடியை வெட்டினாலோ அல்லது பிடுங்கினாலோ அவ்வளவுதான்
உப்பினால் கூந்தல் பொலிவு பெறும்
உப்பு பொடுகுத் தொல்லையையும் குறைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது தவிர, முடி உதிர்வு பிரச்சனையிலும் விடுபடலாம். எனவே முடி தொடர்பான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், இன்றே உப்பைப் பயன்படுத்தலாம்.
உப்பை பயன்படுத்தி பொடுகை போக்குவது எப்படி
முடியில் பொடுகு இருந்தால் உப்பைப் பயன்படுத்தலாம். கூந்தலுக்கு மட்டுமல்ல உச்சந்தலையில் உப்பை பயன்படுத்துவதும் மிகவும் நன்மை பயக்கும். பொடுகை நீக்க உப்பை பயன்படுத்தவும். இதற்கு முதலில் உங்கள் தலையில் உப்பைத் தூவி, மிகவும் லேசாக கைகளால் மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து முடியைக் கழுவவும். 15 நாட்கள் இடைவெளியில், இவ்வாறு உப்பை பயன்படுத்தினால், பொடுகு பிரச்சனை முழுவதுமாக நீங்கி, கூந்தல் வலுப்பெறும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Vitamin D பற்றாக்குறை கொரோனா நோயாளிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR