அலர்டான மூளை... வலுவான தசை... வாக்கிங்கை மிஞ்சும் ரிவர்ஸ் வாக்கிங்... இன்னைக்கே ஆரம்பிச்சுடுங்க!

Reverse Walking/Backward Walking Benefits: ரிவர்ஸ் வாக்கிங் ஒட்டுமொத்த உடலையும் வலிமைப்படுத்துவதோடு, மூளை அலர்டாக இருக்க உதவுகிறது என்றும், வயிறு, இடுப்பு மற்றும் கால்களின் கொழுப்பை மிக விரைவாக குறைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 18, 2024, 12:13 PM IST
  • முளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ரிவர்ஸ் வாக்கிங்.
  • உடல் பருமனை குறைக்கும் ரிவர்ஸ் வாக்கிங்.
  • மூட்டு வலிகளை போக்கும் ரிவர்ஸ் வாக்கிங்.
அலர்டான மூளை... வலுவான தசை... வாக்கிங்கை மிஞ்சும் ரிவர்ஸ் வாக்கிங்... இன்னைக்கே ஆரம்பிச்சுடுங்க! title=

Reverse Walking/Backward Walking Benefits: இன்றைய கால கட்டத்தில், உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை அனைவருமே ஓரளவுக்கு உணர்ந்துள்ளனர். நடைப்பயிற்சி நாள் முழுவதும் முழு உடலையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவி செய்யும். குறிப்பாக, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் பருமனை குறைக்கவும். சிறந்த பயிற்சியாக நடைபயிற்சி, கருதப்படுகிறது. நடைபயிற்சி மூலம் நமது எலும்புகள் தசைகள் ஆகியவையும் வலுப்பெறும். இந்நிலையில் தற்போது ரிவர்ஸ் வாங்கிங் என்னும் பின்னோக்கி நடக்கும் பயிற்சி ட்ரெண்டிங்காக ஆகி வருகிறது.

ரிவர்ஸ் வாக்கிங் ஒட்டுமொத்த உடலையும் வலிமைப்படுத்துவதோடு, மூளை அலர்டாக இருக்க உதவுகிறது என்றும், வயிறு, இடுப்பு மற்றும் கால்களின் கொழுப்பை மிக விரைவாக குறைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். 15 நிமிடம் ரிவர்ஸ் வாக்கிங் செய்தாலே போதுமாம்... ரிவர்ஸ் வாக் செய்யும்போது, கீழே விழும் ஆபத்து அதிகம் என்பதால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஆனால் அதைச் செய்து பழகினால், எளிதான பயிற்சியாக ஆகிவிடும். இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன , என்பது பற்றி விளக்கமாக இங்கே தெரிந்து கொள்ளலாம்.

முளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ரிவர்ஸ் வாக்கிங்

பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வது, மிகவும் கவனமாக செய்ய வேண்டிய பயிற்சி என்பதால், மூளையை மிகவும் அலெர்ட்டாக (Brain Health) வைத்திருக்க உதவும். குறிப்பாக இதனால், மூளை எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க வைக்கும். பின்னோக்கி நடைப்பயிற்சி செய்யும்போது அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதால், கவனச்சிதறல் ஏற்படாமல் தடுக்க முடியும்.

உடல் பருமனை குறைக்கும் ரிவர்ஸ் வாக்கிங்

வழக்கமான நடைப்பயிற்சியால் எரிக்கப்படும் கலோரிகளின் அளவைக் காட்டிலும் பின்னோக்கி நடைப்பயிற்சி செய்யும் போது கூடுதல் கலோரிகளை எரிக்க முடியும் என்பதால், உடல் பருமன், தொப்பை கொழுப்பு ஆகியவற்றை வேகமாக எரிக்கலாம். பின்னோக்கி நடைப்பயிற்சி செய்யும்போது தசைகள் ஒப்பீட்டளவில் அதிகமாக வேலை செய்யும். அதனால் வழக்கத்தைவிட அதிக கலோரிகள் எரிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | கொளுத்தும் சம்மரில் சுகர் லெவலை குறைக்க இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்

மூட்டு வலிகளை போக்கும் ரிவர்ஸ் வாக்கிங்

பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வது மூட்டுகளில் ஏற்படும் வலி, குறிப்பாக முழங்கால் வலியைக் குறைப்பது மட்டுமின்றி மூட்டுகளில் ஏற்படும் அழுத்தமும் குறையும். ஏற்கனவே முழங்கால் பிரச்சினைகள், கீல்வாதம், முடக்குவாதம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கு ரிவர்ஸ் வாக்கிங் செய்வது சில சமயங்களில் கடுமையாக இருக்கலாம். மேலும், மருத்துவரை ஆலோசனை செய்து எந்த அளவிற்கு செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை பெற்றுக் கொண்டு செய்வது நல்லது.

இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியம்

நடைபயிற்சி பொதுவாகவே இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய கார்டியோ பயிற்சியாகும். அதிலும், பின்னோக்கி நடைப்பயிற்சி செய்யும்போது இதயம் மற்றும் நுரையீரலுக்கு ஆக்சிஜனை சீராக வழங்கும். மேலும், பின்னோக்கி நடைப்பயிற்சி செய்யும் போது, வழக்கமாக நடப்பது போல வேகாக நடக்க முடியாது என்பதால், உடலின் சமநிலை மேம்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | தூக்கம் வரவே மறுக்கிறதா... படுக்கைக்கு முன் இந்த உணவுகளை சாப்பிடுங்க - நல்ல தூங்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News