Government Employees Latest News: பென்ஷன் முறையில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பங்களிப்புக்கான புதிய வழிகாட்டுதல்.
Pension Scheme Latest News: அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வூ காலத்தில் பெரும் பென்ஷன் நடைமுறையில் உள்ள செயல்முறையை எளிமைப்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
நாடு முழுவதும் அரசு சார்பில் முக்கியமான அறிவிப்பு வந்து வெளியாகி இருக்கிறது. பென்ஷன் முறையில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அது என்ன மாதிரியான மாற்றம்? அதன் மூலம் என்ன பலன் கிடைக்கும்? போன்ற விவரங்களை அறிந்துக் கொள்ளுங்கோம்.
தேசிய ஓய்வூதிய அமைப்பு முறை (NPS) திட்டத்தில் பங்களிப்புக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. பணியாளர் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் வரும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறையின் அலுவலகக் குறிப்பில் இதற்கான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டிருக்கிறது.
தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசு 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்ப்பஸின் சந்தை வருவாயை பொறுத்து கடைசி கட்ட பென்ஷன் தீர்மானிக்கப்படும் என தற்போது இருக்கும் விதியில் மாற்றம் செய்யப்படுகிறது.
ஏப்ரல் 1, 2004-க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension System) பொருந்தும். தேசிய ஓய்வூதிய திட்டதிற்கான மாத சம்பள பங்களிப்பு 10% ஆகும். இருப்பினும், பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலங்களில், ஊழியர்கள் தங்கள் பங்களிப்பை தொடர்வதா? வேண்டாமா? என்பதை உறுதி செய்யலாம்.
யூபிஎஸ் (UPS) திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் இருந்து சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக பெறுவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்திற்கு சமமான இந்த முழு ஓய்வூதியத்திற்கு தகுதி பெறுவதற்கு ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருக்க வேண்டும்.
பணிக்கு வராத அல்லது ஊதியம் இல்லாத விடுப்பில் இருக்கக்கூடிய பணியாளர்கள், இந்த குறிப்பிட்ட காலத்திற்கு பென்ஷனில் பங்களிக்க தேவையில்லை. ஆனால் பிற துறையில் அல்லது பிற நிறுவனங்களுக்கு டெபுடேஷன் (Deputation) பணியில் உள்ள பணியாளர்கள் எப்போதும் போல NPS திட்டத்தில் பங்களிக்க வேண்டும். அதாவது அவர்கள் இடமாற்றம் செய்யப்படவில்லை என்பதால் பங்களிக்க வேண்டும். நன்னடத்தையில் உள்ள பணியாளர்களும் கட்டாயமாக NPS திட்டத்தில் பங்களிக்க வேண்டும்.
இப்போது ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.50,000 என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ரூ.25,000 பென்ஷனாக வழங்கப்படும். ஆனால் இது மட்டும் அல்ல கூடுதலாக பென்ஷனுடன் அகவலைப்படியும் வழங்கப்படும். அதாவது தற்போது உள்ள 50% அகவலைப்படி என்பது அடிப்படை ஊதியத்தில் பாதியாகும். அதாவது ரூ.25,000 ஆகும். எனவே மொத்தமாக ரூ.50,000 அரசு ஊழியர்களுக்கு பென்ஷனாக வழங்கப்படும். இதன் அடிப்படையாக வைத்து மற்ற வருமானத்தை கணக்கிடலாம்.
அடுத்த நிதியாண்டிலிருந்து தேசிய ஓய்வூதிய திட்ட சந்தாதாரர்கள், உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத்தை வழங்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு (UPS) மாறுவதற்கான விருப்பம் வழங்கப்படும். புதிய ஓய்வூதியம் திட்டம், யூபிஎஸ் இரண்டில் ஒன்றை அவர்கள் தேர்வு செய்யலாம்.
யூபிஎஸ் ஓய்வூதிய திட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை விட அதிக பென்ஷன் கிடைக்கும். ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றவர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருந்தால், கடைசி 12 மாத சேவையின் சராசரி அடிப்படையில் ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக பெறுகிறார்கள்.
10 முதல் 25 ஆண்டுகள் பணிபுரிபவர்களுக்கு அவர்களின் பணிகாலத்திற்கு ஏற்றவாறு ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த புதிய திட்டமானது ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். அதேபோல மார்ச் 31, 2025க்குள் ஓய்வு பெறுபவர்களுக்கு இத்திட்டத்தின் பலன்கள் பொருந்தும்.