எக்ஸ்ரே, CT ஸ்கேன் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா... மருத்துவர்கள் கூறுவது என்ன...

இன்றைய நவீன மருத்துவ நடைமுறையில் உடலை பாதிக்கும் பல்வேறு விதமான நோய்களை கண்டறிய இமேஜிங் நுட்பங்களைப் பயன்படுத்துவது முக்கியமானதாகிவிட்டது. எக்ஸ்ரே, CT ஸ்கேன் மற்றும் பிற இமேஜிங் நடைமுறைகள் மூலம் மருத்துவர்களுக்கு நோயாளிக்கு இருக்கும் பிரச்சனையை துல்லியாமாக கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் பெரிதும் உதவுகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 18, 2024, 03:34 PM IST
  • கதிரியக்க வல்லுநர்கள், கதிர்வீச்சுடன் தொடர்புடைய கடுமையான உடல்நல அபாயங்களை எதிர்கொள்கின்றனர்
  • சில சந்தர்ப்பங்களில், இந்த கதிர்வீச்சு தோல் புற்றுநோயை ஏற்படுத்தலாம்.
  • கதிர்வீச்சு அபாயத்தைத் தவிர்க்க கதிர்வீச்சு பாதுகாப்பு கையுறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
எக்ஸ்ரே, CT ஸ்கேன் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா... மருத்துவர்கள் கூறுவது என்ன... title=

இன்றைய நவீன மருத்துவ நடைமுறையில் உடலை பாதிக்கும் பல்வேறு விதமான நோய்களை கண்டறிய இமேஜிங் நுட்பங்களைப் பயன்படுத்துவது முக்கியமானதாகிவிட்டது. எக்ஸ்ரே, CT ஸ்கேன் மற்றும் பிற இமேஜிங் நடைமுறைகள் மூலம் மருத்துவர்களுக்கு நோயாளிக்கு இருக்கும் பிரச்சனையை துல்லியாமாக கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் பெரிதும் உதவுகின்றன. இருப்பினும், எக்ஸ்ரே போன்ற இமேஜிங் நுட்பங்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அவை கதிர்வீச்சு அபாயத்துடன் வருகின்றன என்று நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸின் ரேடியாலஜித் தலைவர் டாக்டர். பவரன் ராஜ் லிங்கம் கூறினார்.

நோயாளிகளுக்கு இமேஜிங் தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதே வேலையில், அதனை அடிக்கடி பயன்படுத்தும் மருத்துவத் துறையினருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள். பரிசோதனைகளை மேற்கொள்ளும் சுகாதாரப் பணியாளர்கள், குறிப்பாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் கதிரியக்க வல்லுநர்கள், கதிர்வீச்சுடன் தொடர்புடைய கடுமையான உடல்நல அபாயங்களை எதிர்கொள்கின்றனர் என கூறப்படுகிறது. கதிரியக்கத்தில் நீண்ட நேரம் இருப்பது சருமம் மற்றும் தசைகளை சேதப்படுத்தும் (Health Alert) என்கின்றனர் மருத்துவர்கள். 

அறுவைசிகிச்சை நிபுணர்கள் மற்றும் கதிரியக்க வல்லுநர்கள், எக்ஸ்ரே கருவிகளை நீண்ட காலம் பயன்படுத்துவதன் காரணமாக கதிர்வீச்சு தோல் அழற்சி, சருமத்தில் தீக்காயங்கள், சருமத்தின் நிறம் மாறுதல், தடிப்புத் தோல் அழற்சி, சருமம் சிவத்தல் மற்றும் சருமத்தில் புண்கள் போன்ற கடுமையான சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சில சந்தர்ப்பங்களில், இந்த கதிர்வீச்சு பாதிப்பு சரும புற்றுநோயை ஏற்படுத்தலாம்

இமேஜிங் செயல்பாட்டின் போது பெரும்பாலும் கதிர்வீச்சுக்கு வெளிப்படும் கைகள் மிகவும் பாதிக்கப்பட்ட உடல் பகுதி. கைகளில் கதிர்வீச்சு காரணமாக நகங்களின் அமைப்பும் பாதிக்கப்படுகிறது. அதிக அளவு கதிர்வீச்சுக்கு நீண்டகால வெளிப்பாடு நகங்களின் உடையக்கூடிய தன்மை, சிதைவு மற்றும் நிறமாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தும். கதிர்வீச்சு பாதுகாப்பு கையுறைகள் இந்த ஆபத்தை குறைக்க ஒரு அத்தியாவசிய நடவடிக்கையாக நிரூபிக்க முடியும். சில சந்தர்ப்பங்களில், இந்த கதிர்வீச்சு தோல் புற்றுநோயை ஏற்படுத்தலாம், குறிப்பாக ஸ்குவாமஸ் செல் கார்சினோமா, நீண்ட காலத்திற்கு எக்ஸ்ரே கதிர்வீச்சுக்கு வெளிப்படும் சுகாதாரப் பணியாளர்களுக்கு இது மிகவும் பொதுவானது.

மேலும் படிக்க | சுகர் லெவல் சொன்னபடி கேட்க இரவில் இதை குடிங்க போதும்

ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யகி பானர்ஜி கதிர்வீச்சு பாதுகாப்பு குறித்து கூறுகையில், கதிர்வீச்சு அபாயத்தைத் தவிர்க்க மருத்துவ இமேஜிங்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது கட்டாயம். இதில், கதிர்வீச்சு பாதுகாப்பு கையுறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஈயம் அல்லது ஈயம் இல்லாத கலப்பு பொருட்களால் செய்யப்படும் இந்த கையுறைகள் எக்ஸ்ரே போன்ற உயர் ஆற்றல் கதிர்வீச்சிலிருந்து சுகாதார ஊழியர்களின் கைகளைப் பாதுகாக்கின்றன. இந்த கையுறைகள் அதிக அணு எண் கொண்ட பொருட்களை கொண்டதால், கதிரியக்கத்தை திறம்பட உறிஞ்சி, சருமத்தை அடையாமல் தடுக்கின்றன. ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட கதிர்வீச்சு பாதுகாப்பு கையுறைகள் கைகளில் கதிர்வீச்சு வெளிப்பாட்டை 95% குறைக்கலாம் என்பதால், நீண்ட கால சேதத்தைத் தடுக்க உதவுகிறது என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது என்றார்.

மருத்துவ உலகில் இமேஜிங் தொழில்நுட்பம் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதால், சுகாதாரப் பணியாளர்களுக்கு கதிர்வீச்சு வெளிப்பாட்டின் அபாயமும் அதிகரித்து வருகிறது. சரியான நேரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். கதிர்வீச்சு பாதுகாப்பு கையுறைகள் சருமத்தை நேரடியாக சேதப்படுத்தாமல் பாதுகாப்பது மட்டுமல்லாமல், கதிர்வீச்சு தோல் அழற்சி மற்றும் நகங்களின் நிறமாற்றம் போன்ற நீண்ட கால பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாக்கிறது. 

மேலும் படிக்க | கெட்ட கொழுப்பை இயற்கையான வழியில் கட்டுக்குள் கொண்டு வர இந்த எளிய பானங்கள் உதவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News