Oats Vs Wheat Rava Porridge: இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணும் பழக்கமும் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக காலை உணவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. அந்த வகையில் காலை உணவிற்கு ஏற்ற உணவுகளில் ஓட்ஸ் மற்றும் கோதுமை ரவை இரண்டுமே சிறந்த தேர்வாக இருக்கும்.
ஓட்ஸ் மற்றும் கோதுமை ரவை இரண்டும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை என்பதோடு, பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. பெரும்பாலான மக்கள் ஓட்ஸ் அல்லது கோதுமை ரவையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை ஆரோக்கியமான காலை உணவாக விரும்புவதற்கு இதுவே காரணம். அவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது என சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர், ஆனால் ஓட்ஸ் அல்லது கோதுமை ரவை உணவுகள் இரண்டில், எது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த உணவாக இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
ஓட்ஸ்
முதலாவதாக, ஓட்ஸைப் (Oats) பற்றி குறிப்பிடுகையில், இது ஊட்டச்சத்தின் களஞ்சியமாக கருதப்படுகிறது. ஓட்ஸ் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளின் வளமான மூலம் என்பதால், நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக உணர வைக்கும் வகையில், ஆற்றலை வெளியிடுகிறது. மேலும், ஓட்ஸில் அதிக நார்ச்சத்து உள்ளது. குறிப்பாக பீட்டா-குளுக்கன் அதிகமாக உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், கொழுப்பின் அளவைக் குறைத்தல் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்ப்படுத்துதல் உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. மேலும், ஓட்ஸ் புரதத்தின் சிறந்த மூலமாகும். அதோடு, பல்வேறு உடல் செயல்பாடுகளை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் மெக்னீசியம், பாஸ்பரஸ், மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
கோதுமை ரவை
ஓட்ஸைப் போலவே, கோதுமை ரவையும் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும். இதில் குறிப்பாக நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது. வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கோதுமை ரவை உணவுகள் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளின் நல்ல மூலமாகும், இதுவும் ஒரு நிலையான ஆற்றலையும் வழங்குகிறது. கோதுமை ரவையிலும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் நல்ல அளவு பி வைட்டமின்கள், இரும்பு மற்றும் மெக்னீசியம் சத்து உள்ளது, அவை ஆற்றலை வெளியிடுவதற்கும், இரத்த சிவப்பணுக்கள் மற்றும் நரம்புகளின் செயல்பாட்டை உருவாக்குவதற்கும் அவசியம்.
மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... சுவையான ‘சில’ இரவு உணவு ரெஸிபிகள்!
ஓட்ஸ் மற்றும் மோதுமை ரவை... இரண்டில் எது சிறந்தது?
ஓட்ஸ் மற்றும் கோதுமை ரவை இரண்டையும் உட்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இரண்டிற்கும் இடையேயான தேர்வு தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் உணவுத் தேவைகளைப் பொறுத்தது. எளிமையான வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால், நீங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கவும் விரும்பினால், ஓட்ஸ் உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும், ஏனெனில் அவற்றின் அதிக நார்ச்சத்து மற்றும் பீட்டா-குளுக்கன் உள்ளடக்கம். மேலும், உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு (Weight Loss Tips) இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஓட்ஸில் நல்ல அளவு புரதம் உள்ளது, இது எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்.
மறுபுறம், குறைந்த கிளைசெமிக் குறியீட்டு மற்றும் சற்று வித்தியாசமான சுவை கொண்ட ஊட்டச்சத்து நிறைந்த முழு தானியத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்றால், கோதுமை ரவை சிறந்த தேர்வாக இருக்கலாம். இந்திய உணவுகளில், கோதுமை ரவை, உப்புமா, பொங்கல், கஞ்சி என பல வழிகளில் உணவின் ஒரு பகுதியாக தயாரிக்கப்படுகிறது. சிலர் கிச்சடி போல் சாப்பிட விரும்புகிறார்கள், சிலர் உப்மா அல்லது இனிப்பு கஞ்சியாக சாப்பிட விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு பிடித்த வெவ்வேறு சுவைகளுக்கு ஏற்ப கோதுமை ரவையை உட்கொள்ளலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | என்ன செஞ்சாலும் வெயிட் குறையலையா... ‘இந்த’ வெள்ளை உணவுகளை ஒதுக்கினாலே போதும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ