நெஞ்சு வலிக்கான காரணங்கள்: நெஞ்சு வலி தொடங்கும் போது, எந்தவொரு நபரும் பீதி அடையத் தொடங்குவது இயல்பு. ஏனெனில் இது மாரடைப்பின் முக்கிய அறிகுறியாகும். நெஞ்சில் வலி வந்தால், அது வாய்வு வலி யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று அஞ்சி மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள்.
மாரடைப்பு வருவது பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாலும், நெஞ்சு வலிக்குப் பின்னால் வேறு சில காரணங்கள் இருக்கலாம், எனினும் இதனை மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த பிறகுதான் அறிந்து கொள்ள முடியும். எனவே தவறாமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு, பல அறிகுறிகள் பாதிக்கப்பட்ட மக்களின் உடலில் தோன்றத் தொடங்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. அவை மாரடைப்பு அல்ல. மார்பு வலிக்கு பின்னால் வேறு என்ன காரணங்கள் இருக்கலாம் என்று பார்ப்போம்.
மார்பு வலிக்கான பிற காரணங்கள்
1. வறட்டு இருமல்
வறட்டு இருமல் காரணமாக, மார்பு தசைகளில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது, இதன் காரணமாக இந்த தசைகள் பலவீனமடைந்து வலியை ஏற்படுத்துகிறது. இருமல் விரைவில் குணமடையவில்லை என்றால், வலி அதிகரிக்கும். எனவே அலட்சியம் செய்யாமல் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறவும்.
2. நுரையீரல் தக்கையடைப்பு (Pulmonary Embolism)
நுரையீரல் தக்கையடைப்பு என்பது மார்பு வலியை ஏற்படுத்தும் ஒரு மருத்துவ நிலை, இது இதயப் பிரச்சனையாகும், இதில் இரத்தத்தை நுரையீரலுக்கு கொண்டு செல்லும் தமனிகளில் ரத்தம் உறைதல் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் நுரையீரலுக்கு ரத்தம் சரியாகச் செல்லாமல் நெஞ்சுவலி வர ஆரம்பிக்கும். ரத்தம் உறைவதால் ஏற்படும்கட்டிகள் நுரையீரலுக்குச் செல்லும் இரத்தத்தின் இயல்பான ஓட்டத்தைத் தடுப்பதால், இந்த நிலை உயிருக்கு ஆபத்தானது.
மேலும் படிக்க | கரு முதல் கடைசி வரை ஹார்மோன்களை காப்பாற்றும் துத்தநாக சத்து! பெண்களுக்கு அவசியம்
3. நுரையீரல் தொற்று
கொரோனா வைரஸின் போது, மக்களின் நுரையீரலில் நிறைய தொற்று பாதிப்பு இருந்தது, அதன் காரணமாக நெஞ்சுவலி புகார்கள் காணப்பட்டன. நுரையீரலில் வேறு ஏதேனும் வைரஸ் தாக்குதல் இருந்தால், மார்பு வலி ஏற்படக் கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்
4. கோவிட் நிமோனியா
கொரோனா வைரஸ் நோயாளிகளின் நெஞ்சுவலி காரணமாக, பலர் கோவிட் நிமோனியாவுக்கு இரையாக்கத் தொடங்கினர். அதாவது நுரையீரலில் தொற்று ஏற்பட்டால், நுரையீரலின் காற்றுப் பைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் நிமோனியா ஏற்படும் அபாயம் உள்ளது. பின்னர் அது நெஞ்சு வலிக்கு காரணமாகிறது.
மேலும் படிக்க | இந்த கருப்பு மூலிகை ஒன்று போதும்.. நரை முடி நிமிடத்தில் மறந்துவிடும்
5. உளவியல் காரணங்கள்
பரபரப்பான வாழ்க்கைமுறை குடும்பத்தில் சண்டை, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப் பளு, வேலையின்மை, தனிமை, கோபம், வாழ்க்கையில் தோல்வி, தேர்வு பயம் போன்ற காரணங்களால் ஏற்படுகிற மனச்சோர்வு, மன அழுத்தம், மனப் பதற்றம், ஆகியவற்றாலும் நெஞ்சு வலி ஏற்படுகிறது.
6. தசைப்பிடிப்பு
நெஞ்சு வலி சில நேரங்களில் மார்பு பகுதியில் தசைப்பிடிப்பு உண்டாவதால் ஏற்படுகிறது. அதிக பளு தூக்குதல், குழந்தையை தூக்குவது, கனமான பொருள்களை தூக்கி மேலே ஏறுவது போன்றவை எல்லாமே மார்பு வலிக்கு காரணமாக இருக்கலாம். மார்புசுவரின் கோஸ்டோகாண்ட்ரிடிஸ் வீக்கத்துக்கு பெரும்பாலும் காரணமாகிறது. பாதிக்கப்பட்ட இடத்தில், மார்பு பகுதியில் குளிர் ஒத்தடம் பயன்படுத்துவதன் மூலம் வீக்கமும் வலியும் குறையும்.
மருத்துவ சிகிச்சை
மார்பு வலி அசாதாரணமாக இருந்தால் கண்டிப்பாக வீட்டு வைத்தியம் செய்து கொண்டு அலட்சியமாக இருக்க கூடாது. தாமதிக்காமல் மருத்துவ சிகிச்சை தேவை. மூச்சுத்திணறல், குமட்டல், வியர்வை போன்ற அறிகுறிகளுடன் மார்பு வலி ஏற்பட்டாலோ அல்லது தொடர்ந்து மார்பு வலி நீடித்தாலோ நீங்கள் உடனடியாக அவசர சிகிச்சை பெற வேண்டும். ஏனெனில் இது மாரடைப்பாக இருக்கலாம் எனவே தாமதிக்காஅமல் சிகிச்சை செல்ல வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ