இனி COVID Test செய்ய கத்தினால் போதும்: Test செய்வதில் இனி வலி இல்லை ஜாலிதான்

நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி கொரோனா பரிசோதனைக்கான ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளார். இது பழைய முறையை விட முற்றிலும் மாறுபட்டதாகவும் மிகவும் வேகமான முறையாகவும் உள்ளது.

Last Updated : Mar 6, 2021, 03:24 PM IST
இனி COVID Test செய்ய கத்தினால் போதும்: Test செய்வதில் இனி வலி இல்லை ஜாலிதான்  title=

ஆம்ஸ்டர்டாம்: கோவிட் டெஸ்ட் செய்துகொள்வதில் பலருக்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த சொதனை செய்ய மூக்கு வழியாகவும் மாதிரிகள் எடுக்கப்படுவதால் பலர் வலியால் அவதிப்படுகிறார்கள். ஆனால் தற்போது வந்திருக்கும் ஒரு புதிய கோவிட் சோதனை முறையால் இவை அனைத்தையும் தவிர்த்து விடலாம்.  

நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி கொரோனா பரிசோதனைக்கான ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளார். இது பழைய முறையை விட முற்றிலும் மாறுபட்டதாகவும் மிகவும் வேகமான முறையாகவும் உள்ளது. கொரோனா தொற்று (Coronavirus) பரிசோதனையை புதிய வழியில் செய்துகொள்ள, நீங்கள் ஒரு அறையில் சத்தமாக கத்த வேண்டும் அல்லது பாட வேண்டும். ஆம்!! இதை செய்தால் போதும். இப்படி செய்தாலே உங்கள் பரிசோதனை முடிந்து விடும். உங்கள் மூக்கு மற்றும் வாயிலிருந்து மாதிரிகள் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

கொரோனா சோதனை இப்படித்தான் செய்யப்படும்

ஸ்க்ரீமிங் கோவிட் டெஸ்டின் (COVID Test) புதிய மற்றும் எளிதான முறையைக் கண்டுபிடித்த விஞ்ஞானியின் பெயர் பீட்டர் வான் வெயிஸ். பீட்டரின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நபர், ஏர்லாக் செய்யப்பட்ட கேபினில் கத்த வேண்டும் அல்லது பாட வேண்டும். ஒரு தொழில்துறை காற்று சுத்திகரிப்பு கருவி, வாயிலிருந்து வரும் துகள்களை சேகரிக்கும். இது கொரோனா வைரஸை சோதிக்க பயன்படும்.

ALSO READ: Good News: நேரக்கட்டுப்பாடு நீக்கப்பட்டது, இனி 24x7 எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்

விஞ்ஞானி பீட்டர், "ஒரு நபர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருந்தால், அவர் கூச்சலிடும்போது, அவர் வாயிலிருந்து 10,000 துகள்கள் வெளிவரும். இந்த துகள்களிலிருந்து கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெறும். விஞ்ஞானி பீட்டர் தனது பரிசோதனை பூத்தை, நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள கொரோனா சோதனை மையத்திற்கு அருகே அமைத்துள்ளார். அங்கு மக்கள் கூச்சலிட்டோ அல்லது பாடல்களை பாடியோ கொரோனா பரிசோதனை செய்துகொள்கிறார்கள்.

வழியில் செய்து முடித்த அனுபவம் இதுதான்

கூச்சலிட்டு அல்லது பாடுவதன் மூலம் இந்த வழியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதற்கான அனுபவம் இப்படி இருந்தது

இந்த புதிய வழியில் கொரோனா பரிசோதனை செய்துகொண்ட சோரோயா என்பவர் இந்த முறை மிகவும் எளிதானதாக உள்ளது என்று கூறினார். இதில் வலியும் இல்லை. யாரும் நம்மை பார்க்காத போது கத்துவது இன்னும் நன்றாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். கொரோனா சோதனையில் தனக்கு தொற்று இல்லை என தெரிய வந்ததாவும் அவர் மேலும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த கொரோனா பரிசோதனையில் இவ்வளவு நேரமே ஆகும்

விஞ்ஞானி பீட்டர் கூறுகையில், இந்த கொரோனா பரிசோதனை செய்ய 3 நிமிடங்களே ஆகும் என்றார். பரிசோதனை செய்தவரின் மாதிரியில் (Samples) கொரோனா வைரஸ்  உள்ளதா இல்லையா என்பது நானோமீட்டர் ஸ்கேல் சைசிங் கருவியின் உதவியுடன் செய்யப்படுகின்றது.

ALSO READ: Bharat Biotech: கோவாக்சின் 81% மருத்துவ செயல்திறனைக் காட்டுகிறது

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News