உடற்பயிற்சி உடலாரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால், உடலை தாங்கி நிற்கும் கால்களுக்கு பொதுவாக யாரும் தனிக்கவனம் கொடுப்பதில்லை. கால்களுக்கு பயிற்சி செய்வது கால்களின் தசை மற்றும் வலுவை அதிகமாக்கும்.
இதற்காக செலவு செய்து ஜிம்மிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. கால்களை வலுவாக்கினால் கால்வலி குறைவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்கலாம்.வீட்டிலேயே பயிற்சிகளை வீட்டிலேயே செய்யலாம்.
கால்களுக்கு உடற்பயிற்சி செய்தால் கால் வலியே காணாமல் போய்விடும்
மார்பு, பைசெப்ஸ், தோள்பட்டை போன்று கால்களின் தசைகளையும் வலுவாக மாற்றுவது அவசியம். அப்போதுதான் உடல் முழுவதும் நன்றாக இருக்கும். வலிமையான கால்களைப் பெற வீட்டிலேயே செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் சில...
முதலில், கால்களை அகலமாகத் விரித்து வைத்துக் கொண்டு நிற்கவும். பிறகு இடுப்பை நேராக வைத்து, மார்பை முன் நோக்கி வளைத்து, சிறிது சிறிதாக முழங்கால்களை நோக்கி கீழே கொண்டு வரவும். அப்படியே ஒரு நிமிடம் நிற்கவும். இந்தப் பயிற்சியை 10 முறை செய்யவும்.
Also Read | குளிர்காலத்திலும் சுறுசுறுப்பாக இருக்க எளிய குறிப்புகள்
கால்களை வலுவாக்குவதற்கு இரண்டாவதாக செய்ய வேண்டிய பயிற்சி இது. முதலில் நேராக நிற்கவும். ஒரு காலை நீட்டி, பெரிய அடியாக எடுத்து வைக்கவும். ஒரு கால் நின்ற இடத்திலேயே இருக்க, மற்றொரு கால் மிகவும் முன்னர் இருக்கும் நிலையில் அந்த பாதத்தை வளைத்து உட்காரவும். 10 வரை எண்ணி விட்டு, அதன்பிறகு நேராக நின்று மீண்டும் காலை மாற்றிசெய்யவும். இப்படி 10 முறை தொடர்ந்து செய்யவும்.
கால்களை வலுவாக்கும் பயிற்சிகளின் மூன்றாவது பயிற்சி இது. இந்தப் பயிற்சியைச் செய்ய எடை பயன்படுத்த வேண்டும். டம்பல் போன்ற உடற்பயிற்சி செய்யும் சாதனம் ஏதேனும் இருந்தால் அதைப் பயன்படுத்தவும் அல்லது வீட்டில் ஒரு தண்ணீர் குடிக்கும் பிளாஸ்டிக் பாட்டிலில் மண் அல்லது ஏதாவது பொருளை நிரப்பி அதை பயன்படுத்தவும்.
இரு கைகளாலும் எடையை உயர்த்தி, முழங்கால்களை அகற்றி நிற்கவும். உடலை வளைத்துக் கொண்டே முன்னோக்கி குனிந்துக் கொண்டே எடையை கீழே கொண்டு வரவும். முன்னர் குனிந்துக் கொண்டே வந்து எடையை பாதங்களுக்கு அருகில் வைக்க முயற்சிக்கவும். பிறகு மீண்டும் கைகளை உயர்த்தி எடையை மேலே செல்லவும். இதே 10 முறை செய்யவும். இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வரும்போது கால் தசைகள் வலுவாகும்.
இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றானது இல்லை. இது விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது.
Also Read | புல்லுக்கு இத்தனை மருத்துவ பயன்களா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR